மழை வெள்ளத்தில் இருந்து மக்களைக் காக்க திமுகவினர் களம் இறங்க ஸ்டாலின் வேண்டுகோள்
மழை வெள்ளத்தில் இருந்து மக்களைக் காக்க திமுகவினர் களம் இறங்க வேண்டும் என அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை : மழை வெள்ளத்தில் இருந்து மக்களைக் காக்க திமுகவினர் களம் இறங்க வேண்டும் என அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை கொளத்தூரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் ஒரே நாள் மழைக்கே வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டிருக்காது என்றார்.

தூர்வாராத அரசு
எண்ணூர் - முட்டுக்காடு இடையேயான கால்வாயை தூர்வாரியிருந்தால் சென்னை மாநகரில் எங்கேயுமே வெள்ள நீர் தேங்காது. மக்கள் மீது அக்கறையின்றி ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதிலேயே எடப்பாடி பழனிசாமி அரசு குறியாக உள்ளது.

அரசு விழித்துக்கொள்ளுமா
அதிகாரிகள் முறையாக பணிகளை மேற்கொண்டிருந்தால் மழைநீர் தேங்க கூடிய நிலை ஏற்பட்டிருக்காது. இப்போதாவது அதிகாரிகள் நிவாரண பணிகளில் ஈடுபட வேண்டும். தமிழக அரசு இனிமேலாவது விழித்து கொண்டு வெள்ள தடுப்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

குதிரை பேர அரசு
மைனாரிட்டியாக உள்ள அரசை மெஜாரிட்டியாக்குவது எப்படி, யாருக்கு எவ்வளவு கமிஷன் தொகை கொடுத்து ஆட்சியை தக்க வைப்பது, வேறு அணிக்கு சென்று விடாமல் அமைச்சர்களையும், எம்எல்ஏக்களையும் தக்க வைப்பது எப்படி என்ற நோக்கத்திலேயே எடப்பாடி தலைமையிலான குதிரைபேர அரசு செயல்பட்டு வருவதாக சாடினார்.

அரசு செயலிழந்து விட்டது
மழை வெள்ளத்தில் இருந்து மக்களைக் காக்க திமுகவின் களம் இறங்க வேண்டும் என்றும் ஒரு நாள் மழையை சமாளிக்க முடியாமல் எடப்பாடி அரசு செயல் இழந்து உள்ளது என்றும் அவர் கூறினார்.

மழையால் ஒத்திவைப்பு
மேலும் நவம்பர் முதல் வாரத்தில் தொடங்க இருந்த எழுச்சி பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், நிர்வாக ரீதியாக தோல்வியடைந்து விட்ட ஆட்சியை நீக்கும் எழுச்சி பயணம் வேறு ஒரு தேதியில் நடக்கும் என்றும் அவர் கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications