ஜல்லிக்கட்டு போராட்டத்தை மாணவர்கள் தான் வெற்றி பெறச் செய்தார்கள்... நினைவூட்டிய ஸ்டாலின்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை வெற்றி பெற செய்தது மாணவர்கள் என்பதை மறந்துவிட முடியாது என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேட்டுப்பாளையம் : தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தை மாணவர்கள் தான் வெற்றி பெறச் செய்தார்கள் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தி.மு.க இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் அண்ணாவின் 109-வது பிறந்தநாள் விழாவையொட்டி மாநில அளவில் மாணவ-மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநில அளவிலான இறுதிப்போட்டிகள் மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலையில் உள்ள ஆர்.பி.கே. திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் இன்று பரிசுகளை வழங்கினார். பின்னர் மாணவர்களுக்கு மத்தியில் பேசிய அவர் : மாணவர்கள் நினைத்தால் அரசியல், பொருளாதாரம் என அனைத்தையும் சரி செய்ய முடியும். நம் மொழி மற்றும் இனத்தை காக்க மாணவர்கள் முன் வர வேண்டும்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதற்கு மாணவர்கள் தான் முக்கியக் காரணம். நீட் தேர்வை கொண்டுவருவதில் மத்திய அரசு தீவிரமாக இருந்திருந்தால், மாநில அரசு அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக மாணவர்களுக்காக போராடி இருக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் பேசினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications