100, 101, 108, 110... ஜெ. போடுவது 111.. கலக்குறீங்களே ஸ்டாலின்....!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை ஒரு நம்பரை வைத்து வாரினார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.

திருவண்ணாமலையில் அவர் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தபோது நம்பர்களை அடுக்கிப் பேசி அனைவரையும் சிரிக்க வைத்தார்.

அவசர தொலைபேசி எண்களை வைத்துப் பேசிய ஸ்டாலின் கடைசியாக, ஆனால் ஜெயலலிதா போடுவது அனைவருக்கும் 111 அதாவது பட்டை நாமாம் என்று அவர் முடித்தபோது கூட்டம் கொல்லென்று சிரித்தது.

ஸ்டாலினின் அந்த நம்பர் பேச்சு...!

அவசரப் போலீஸுக்கு 100

அவசரப் போலீஸுக்கு 100

மு.க.ஸ்டாலின் பேசுகையில், அவசரப் போலீஸுக்கு 100, தீயணைப்புக்கு 101..

ஆம்புலன்ஸுக்கு 108

ஆம்புலன்ஸுக்கு 108

ஆம்புலன்ஸுக்கு 108, பொய் புரூடாவுக்கு ஜெயலலிதாவின் அறிவிப்பாணை 110...

நெற்றியில் போடுவது 111

நெற்றியில் போடுவது 111

அவர் தமிழ்நாட்டு மக்களின் நெற்றியில் போடுவது 111 என்று அடுக்கி நிறுத்தினார். அவர் அப்படிப் பேசியதும் திருவண்ணாமலையே அதிரும் வகையில் கைத்தட்டல் வானைப் பிளந்தது.

இது மட்டுமா.. இன்னும் இருக்கே....

இது மட்டுமா.. இன்னும் இருக்கே....

அடுத்து அவர் ஒரு பாட்டைப் பாடினார். அஏதாவது, அச்சம் என்பது மடமையடா... என்ற பாடலை ஜெயலலிதா பிரசாரத்தில் பாடி வருகிறார். இப்போது கண்ணதாசன் இருந்திருந்தால், இப்படிதான் எழுதியிருப்பார்... அம்மா என்பது மடமையடா... அம்மாவைப் பார்ப்பது கடினமடா... வறுமையில் சாவு... கொலையில் சாவு... நாளை தமிழகம் காப்பது கலைஞரடா...என்று பாட்டுப் பாட மறுபடியும் கொல்லென்று சிரிப்புடன் கூட்டத்தினர் சிலிர்த்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+