தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரை ‘நமக்கு நாமே’ தொடரும்... ஸ்டாலின் அறிவிப்பு
ஈரோடு: தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரை "நமக்கு நாமே' மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தொடரும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் ஆயத்த வேலைகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. திமுக பொருளாளர் ஸ்டாலினும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ‘நமக்கு நாமே' என்ற பெயரில் பொதுமக்களை சந்தித்து குறைகேட்டு வருகிறார்.

அந்த வகையில் ஈரோடு அருகே, மேட்டுக்கடையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற "நமக்கு நாமே' விடியல் மீட்புப் பயண நிகழ்ச்சியில், அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களை சந்தித்து ஸ்டாலின் கலந்துரையாடல் நடத்தினர்.
அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் "நமக்கு நாமே' பயணத்தை வெற்றிகரமாக நடத்தியதால் எனக்கு ஆணவம் ஏற்படவில்லை; பெருமை ஏற்பட்டு இருக்கிறது. அடுத்தக் கட்டமாக மக்கள் நலப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்களைச் சந்தித்துப் பேசவுள்ளோம்.
தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரை "நமக்கு நாமே' நிகழ்ச்சிகள் தொடரும். மே மூன்றாவது வாரத்தில் தமிழகத்தில் ஒரு புதிய ஆட்சி ஏற்படவுள்ளது. தேர்தல் நேரத்தில் மட்டுமல்லாது, ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் உங்களுக்காக நாங்கள் குரல் கொடுத்து வருகிறோம் என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி!












Click it and Unblock the Notifications