திராவிட இயக்கத்தை அழிக்க நினைத்தால் தோற்பார்கள்.. ரஜினி கருணாநிதி சந்திப்புக்குப் பின் ஸ்டாலின்

Posted By:
Subscribe to Oneindia Tamil
தன்னுடைய அரசியல் பிரவேசத்திற்கு கருணாநிதியிடம் ஆசி பெற்றார் ரஜினிகாந்த்- வீடியோ

சென்னை : நடிகர் ரஜினி ஆசி மற்றும் தான் பெற்றார், அவர் திமுகவிடம் ஆதரவும் கேட்கிறாரா, அதை ஏற்கலாமா வேண்டாமா என்பதையெல்லாம் தேர்தல் நேரத்தில் பார்க்கலாம் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி, நடிகர் ரஜினியுடனான சந்திப்பு குறித்து அந்த கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கோபாலபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது : அரசியல் பண்பாடு, நாகரிகத்தின் அடிப்படையில் கருணாநிதி ரஜினிகாந்த்தை இன்முகத்தோடு வாழ்த்தி இருக்கலாம், அந்த அடிப்படையில் தான் நடிகர் ரஜினிகாந்தும் அவ்வாறு சொல்லி இருப்பார் என்றே நான் கருதுகிறேன்.

Stalin says let us wait upto election whether Rajini seeks DMK support

திமுகவின் ஆசி மட்டும் தான் கேட்கிறாரா, ஆதரவும் கேட்கிறாரா? அதை ஏற்றுக் கொள்ளலாமா வேண்டாமா என்பதெல்லாம் தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்பட வேண்டிய விஷயம்.

Stalin says let us wait upto election whether Rajini seeks DMK support

அவர் ஆன்மிக அரசியல் தான் நடத்தப்போகிறேன் என்று தெளிவாக சொல்லி இருக்கிறார். தமிழ்நாட்டில் இருக்கும் திராவிட இயக்கத்தையே அழித்து விடலாம் என்று ஒரு சிலர் திட்டமிட்டு பலருடைய தூண்டுதலால் ரஜினிகாந்த் கட்சி தொடங்கி இருப்பதாக ஒரு உருவகத்தை சிலர் உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர்.

Stalin says let us wait upto election whether Rajini seeks DMK support

நான் அவர்களுக்கு தெளிவாக சொல்லிக் கொள்கிறேன், இந்த மண் திராவிட இயக்கத்தின் மண். தமிழ்நாட்டு மண் பெரியார், பேரறிஞர் அண்ணா, கருணாநிதியால் பண்பட்டு இருக்கக் கூடிய மண். ஆக அப்படிப்பட்ட திராவிட இயக்கத்தை அழிக்க முயற்சித்துப் பார்த்தவர்கள் எல்லாம் தோற்றக் கதைகள் நாட்டிற்கே நன்றாகத் தெரியும் என்று ஸ்டாலின் கூறி இருக்கிறார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMK working president M.K.Stalin accuses those who plan to defeat Dravidian politics at Tamilnadu will definitely lose there were many examples for that in history
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற