ஜெ. 'எஸ்கேப்பாக'த்தான் நில ஆர்ஜித மசோதாவுக்கு 'எஸ்' சொன்னது அ.தி.மு.க.: மு.க.ஸ்டாலின் சாடல்!
திருவாரூ: சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனையில் இருந்து ஜெயலலிதா தப்ப வேண்டும் என்பதற்காகவே மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவை அண்ணா தி.மு.க. ஆதரித்துள்ளது என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
நிலம் கையகப்படுத்தும் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். அப்போது ஸ்டாலின் பேசியதாவது:
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது அனைத்து தரப்பினரையும் கலந்து ஆலோசித்து நிலம் கையகப்படுத்தும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் தற்போதுள்ள மோடி அரசு கொண்டு வந்துள்ள மசோதா, விவசாயிகளை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.

செல்வந்தர்களுக்கும், ரியல் எஸ்டேட் தொழில் அதிபர்களுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் சாதகமாக இந்த மசோதா இருப்பது வேதனை அளிக்கிறது.
விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படுவோம் என்று அளித்த உறுதிமொழிகளை பாரதிய ஜனதா கட்சி அரசும், அண்ணா தி.மு.க.வும் மீறிவிட்டனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட ஜெயலலிதா தப்பிக்கவே நிலம் கையகப்படுத்தும் மசோதாவை லோக்சபாவில் அதிமுக ஆதரித்திருக்கிறது.
வேளாண்துறை அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications