குதிரை பேர அரசை ஆளுநர் பாராட்டுவது வேதனை - ஸ்டாலின் #TNAssembly
குதிரை பேர அரசை ஆளுநர் பாராட்டுவது வேதனையளிப்பதாக எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்வதாகவும் கூறியுள்ளார் ஸ்டாலின்.
Recommended Video

சென்னை: சட்டசபையில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்ததாக ஸ்டாலின் கூறியுள்ளார்.
2018 ஆம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியுள்ளது. தமிழ்தாய் வாழ்த்து முடிந்த உடனே ஸ்டாலின் பேச வாய்ப்பு கேட்டார். அப்போது மறுக்கப்பட்டது.
ஆளுநர் பேச தொடங்கிய உடன் திமுகவினர் முழக்கமிட்டனர். அப்போது ஆளுநர் உட்காருங்க என்று கூறினார். ஆனால் திமுக எம்எல்ஏக்கள் எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.
கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள், காங்கிரஸ், இந்திய முஸ்லீம் கட்சியினரும் வெளிநடப்பு செய்தனர்.
செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், வெளிநடப்பு செய்ததற்கான காரணத்தை செய்தியாளர்களிடம் விளக்கினார்.

பெரும்பான்மையில்லை
மைனாரிட்டி அரசாக ஆளும் அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. மெஜாரிட்டியை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும். பெரும்பான்மையில்லாத அரசு நீடிப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது.

ஆளுநர் பாராட்டுவதா?
அதை விட்டு விட்டு குதிரை பேர அரசை ஆளுநர் பாராட்டி கொண்டிருக்கிறார். பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடாததால் வெளிநடப்பு செய்துள்ளோம். தமிழகத்தில் பொருளாதார நிலை சீர்கெட்டுள்ளது.

ஆய்வுக்கு கண்டனம்
மாநில சுயாட்சிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சில மாவட்டங்களில் ஆய்வு செய்துள்ளார். ஆளுநர் ஆய்வை வரவேற்கும் தமிழக அரசின் நடவடிக்கை வேதனை அளிக்கிறது. தமிழகத்தில் ஆளுநர் ஆய்வு செய்வதை கண்டிக்கிறோம்.
தினகரனுடன் சேரமாட்டோம்
சட்டசபையில் டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்பட வாய்ப்பு உள்ளதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஸ்டாலின், அவ்வாறு செயல்பட வேண்டிய அவசியம் திமுகவிற்கு கிடையாது என்று தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications