மக்களுக்குடன் கைகுலுக்கி, குழந்தையை கொஞ்சி.. வீதி, வீதியாகப் போய் நன்றி தெரிவித்த ஸ்டாலின்
சென்னை: கொளத்தூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட தன்னை வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு வீதி வீதியாக சென்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் போட்டியிட்டார். ஏற்கனவே கொளத்தூர் எம்.எல்.ஏ. வாக இருந்த ஸ்டாலின் மீது நம்பிக்கை வைத்து மக்கள் மீண்டும் அவரையே தேர்வு செய்துள்ளனர்.
இந்நிலையில் தன்னை வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

வீதி வீதியாக
கொளத்தூருக்கு சென்ற ஸ்டாலின் திறந்த ஜீப்பில் நின்று கொண்டு வீதி, வீதியாக சென்று வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். ஸ்டாலினை காண சாலையின் இரு புறங்களிலும் மக்கள் கூடியிருந்தனர்.

கை கொடுத்து
வாக்காளர்களின் கையை பிடித்து ஸ்டாலின் நன்றி தெரிவித்ததில் அவர்கள் நெகிழ்ந்துவிட்டனர். வாக்காளர்கள் ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் மரியாதை செய்தனர்.

குழந்தையை தூக்கி
நன்றி தெரிவிக்க சென்ற இடத்தில் கைக் குழந்தையை தூக்கி கொஞ்சி, முதியவர்களுடன் கைக்குலுக்கினார் ஸ்டாலின். ஒரு எம்.எல்.ஏ. சாதாரண நபர் போன்று மக்களோடு மக்களாக இருக்க விரும்புவதை வாக்காளர்கள் வரவேற்றுள்ளனர்.

5 மணிநேரம்
மாலை 4 மணிக்கு கொளத்தூருக்கு சென்ற ஸ்டாலின் இரவு 9 மணி வரை வீதி, வீதியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அவர் கொளத்தூரின் கிழக்கு பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு சென்று இரு கை கூப்பி நன்றி கூறினார். இன்று மேற்கு பகுதிக்கு சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க உள்ளார்.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications