சட்டசபையை கூட்டி தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்: ஸ்டாலின்
தமிழக சட்டமன்றத் சிறப்பு கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை: தமிழக சட்டமன்றத் சிறப்பு கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழக சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று கூறியுள்ளார். தமிழகத்தை வறட்சி மாநில அறிவிக்கக்கோரி தீர்மானம் நிறைவேண்டும் என்றும் திமுக பொருளாலர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக விவசாயிகளுக்கு அதிமுக அரசு இழப்பீடு வழங்க வேண்டும். தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
உழவர்கள் நாளான இன்று தமிழகத்தில் விவசாயிகளின் நிலை வேதனைக்குரியதாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
தமிழக பட்ஜட் கூட்டத்தொடர் செப்டம்பர் 2ஆம் தேதி நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து சட்டமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் கூட்டப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 5ஆம் தேதி சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து இதுவரை கூட்டத்தொடர் தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications