நெற்றியில் வைத்த குங்குமத்தை அழித்தாரா ஸ்டாலின்? சென்னை பிரசாரத்தில் சர்ச்சை
சென்னை: வாக்காளர் ஒருவர் நெற்றியில் வைத்த குங்குமத்தை வேண்டுமென்றே உடனேயே அழித்துவிட்டதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னையில், எழும்பூர், தி.நகர், துறைமுகம் உள்ளிட்ட பல தொகுதிகளில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் இன்று திண்ணை பிரசாரம் மேற்கொண்டார்.
மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நடந்து சென்று கை குலுக்கி, செல்போனில் செல்ஃபிகள் எடுக்க அனுமதித்தார்.

எழும்பூர் தொகுதியில் போட்டியிடும் கே.எஸ்.ரவிச்சந்திரன் ஆதரித்து, கே.வி.கார்டனில் ஸ்டாலின் வாக்கு சேகரித்தபோது, அங்குள்ள கோவிலை கடந்து சென்றார். அப்போது, ஸ்டாலின் நெற்றியில், ஒருவர் குங்குமம் வைத்து விட்டார்.
அந்த இடத்தை கடந்ததும், ஸ்டாலின் தனது கைக்குட்டையால் குங்குமத்தை அழிக்க தொடங்கினார். முழுமையாக அழியும்வரை மீண்டும் மீண்டும் கர்ஃசீப்பால் அதை துடைத்தார். இது அங்கிருந்த டிவி சேனல் வீடியோ கேமராவில் பதிவானது.
நெற்றியில் குங்குமம் இருப்பதை பார்த்து ரத்தம் வழிகிறதா என்று கருணாநிதி கேலி செய்ததாக கூறப்படுவதுண்டு. இப்போது அதே குங்குமம் சர்ச்சையில் ஸ்டாலினும் சிக்கியுள்ளார். சமூக வலைத்தளங்களில் ஸ்டாலின் செயலுக்கு எதிராகவும், ஆதரவாகவும் கருத்துக்கள் பரிமாறப்பட்டு வருகின்றன.
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications