நெடுவாசலில் ஸ்டாலின் - கொட்டும் மழையில் தரையில் அமர்ந்து போராட்டம்
நெடுவாசல் நடைபெறும் போராட்டக்க களத்துக்கு நேரில் சென்று மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். கொட்டும் மழையில் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.
புதுக்கோட்டை: நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நடைபெறும் போராட்டத்துக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். கொட்டும் மழையில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் பங்கேற்றார் ஸ்டாலின்.
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் 16வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அரசியல் கட்சித்தலைவர்கள், இளைஞர்கள், மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.

கொட்டும் மழையில் போராட்டம் நைடைபெற்று வருகிறது. திமுக செயல்தலைவர் ஸ்டாலின் நெடுவாசலுக்கு நேரில் வந்து போராட்டத்தில் பங்கேற்று பேசினார். தரையில் மக்களோடு மக்களாக அமர்ந்து போராட்டத்தில் பங்கேற்றார்.
போராட்டக்களத்தில் பேசிய ஸ்டாலின், அரசியல் கலக்காமல் விவசாயிகளுக்காக விவசாயிகளால் நடைபெறும் போராட்டம் இது என்றார். மத்திய அரசு உடனடியாக இந்த திட்டம் பற்றிய அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றார். இந்த திட்டம் செயல்படுத்தப்படாது என்ற உறுதிமொழியை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்றார். மாநில அரசு அழுத்தம் தரவேண்டும் என்றார்.

இதே நிலை நீடித்தால் உங்களோடு நானும் அமர்ந்து போராடுவேன். திமுக துணை நிற்கும் என்றும் ஸ்டாலின் கூறினார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications