ஆர்.கே. நகரில் தேர்தல் அதிகாரியை மாற்றினால் மட்டும் போதாது... ஸ்டாலின்
ஆர்.கே. நகரில் தேர்தல் அதிகாரி வேலுச்சாமி மாற்றப்பட்டு பிரவீன் நாயர் நியமனம் செய்யப்பட்டுள்ளதற்கு ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: ஆர்.கே. நகரில் தேர்தல் அதிகாரியை மாற்றியது வரவேற்கத்தக்கது என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். தேர்தல் முறையாக நடக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21 ம் தேதி நடக்க உள்ளது. இந்நிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரியான வேலுச்சாமி மீது பல்வேறு கட்சிகள் புகார் அளித்துள்ளன.

வேலுச்சாமி தனது பணியை முறையாக மேற்கொள்ளவில்லை என திமுக சார்பில் இன்று காலை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து மனு அளிக்கப்பட்டது. இதே போன்று விஷால் வேட்புமனு விவகாரத்திலும் வேலுச்சாமி மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டது.
பல புகார்கள் வந்ததை அடுத்து தேர்தல் அதிகாரி குறித்து ராஜேஷ் லக்கானி இன்று ஆலோசனை மேற்கொண்டார். தலைமை தேர்தல் கமிஷனுக்கும் இது தொடர்பாக தகவல் அளிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக வேலுச்சாமி மாற்றப்பட்டு, அவருக்கு பதில் பிரவீன் நாயர் தேர்தல் அதிகாரியாக செயல்படுவார் என ராஜேஷ் லக்கானி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தலைமை தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் வேலுச்சாமி மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல்தலைவர் ஸ்டாலின், தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும் என்று மனு அளித்தோம். தேர்தல் அதிகாரியை மாற்றியது மட்டுமல்ல பணப்பட்டுவாடா முறைகேடுகளை தடுக்க வேண்டும். தேர்தல் முறையாக நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications