2019ல் இந்திய பிரதமராக ராகுல்... தமிழக முதல்வராக ஸ்டாலின் - அடடே குஷ்பு
2019ஆம் ஆண்டில் இந்திய பிரதமராக ராகுல் காந்தி பதவியேற்பார் என்றும் தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவி வகிப்பார் என்றும் குஷ்பு கூறியுள்ளார்.
சென்னை: 2019ல் தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலினும், இந்தியாவின் பிரதமராக ராகுலும் பதவியேற்பார்கள் என குஷ்பு தெரிவித்துள்ளார். சென்னை வேலப்பன்சாவடியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் பிறந்தநாள் விழாவில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதே குஷ்புதான் திமுகவில் இருந்த போது, கடந்த 2014ஆம் ஆண்டு திமுகவுக்கு அடுத்த தலைவர் ஸ்டாலின்தான் என்று நாமே ஒரு முடிவுக்கு வந்துவிடக்கூடாது. மேலும் திமுகவுக்கு அடுத்த தலைவர் தளபதியாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்று கூறினார்.

அது கட்சியில் யாராகவும் இருக்கலாம். கட்சியின் நலனுக்கு யார் பொறுத்தமாக இருப்பார்களோ அவர்களை உட்கட்சி தேர்தல் நடத்திதான் தலைமை பதவிக்கு தேர்ந்தெடுப்பார்கள் என்று கூறியிருந்தார். இந்த கருத்து திமுகவினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதனைக் கண்டித்து பட்டினபாக்கத்தில் உள்ள நடிகை குஷ்புவின் வீட்டில் கற்கள் வீசப்பட்டன. அந்த நேரத்தில் திருச்சியில் இருந்த குஷ்புவின் கார் மீது செருப்பு வீசப்பட்டது. திருச்சி விமான நிலையம் வந்த குஷ்புவை எதிர்த்து திமுகவினர் முழக்கமிட்டனர்.
இதனால் வெறுப்படைந்த குஷ்பு, ஆளை விட்டால் போதும் என்று திமுகவில் இருந்து விலகினார். அப்போது இது குறித்து கருத்து கூறிய ஈவிகேஎஸ் இளங்கோவன், தமிழகத்தில் காங்கிரஸ் பூஜ்யம் தான் அதை ஒதுக்கி வைத்து விட்டால் நாம் ஜெயித்து விடலாம் என்று நம்மை ஒதுக்கி வைத்தவர்கள் நடந்து முடிந்த தேர்தலில் பூஜ்யம் ஆகி விட்டார்கள். காங்கிரஸ் மீது பழிபோட்டு தப்பி விடலாம் என்ற கனவு கண்டீர்கள். எல்லாம் கலைந்து விட்டது. இப்போது அங்கு இருந்து ஒரு பூ வும் போய் விட்டது என்று பேசினார்.
இப்போது அதே குஷ்புதான் தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்பார் என்று கூறியுள்ளார். சென்னை வேலப்பன்சாவடியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் பிறந்தநாள் விழாவில் பேசிய குஷ்பு, 2019ல் தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலினும், இந்தியாவின் பிரதமராக ராகுலும் பதவியேற்பார்கள் என தெரிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications