ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர்... கனிமொழி பரபரப்பு பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: தமிழகத்தை ஆளும் தகுதியும், திறமையும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மட்டும் உள்ளது. எனவே ஸ்டாலின்தான் அடுத்த முதல்வராக வருவார். அடுத்த முதல்வராக வேறு யார் வருவதையும் மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று கனிமொழி எம்.பி.கூறியுள்ளார்.

திமுக மகளிர் அணி சார்பில் தி.மு.க. தலைவர் கருணாநிதி 94-வது பிறந்தநாளை முன்னிட்டு பெண்களுக்கு இலவச மார்பக புற்றுநோய், கர்ப்பபை புற்றுநோய் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் முகாம் நேற்று நடந்தது. இதில் கனிமொழி எம்.பி.கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.

 Stalin will come as the next Chief Minister of tn- kanimozhi

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் கனிமொழி, அப்போது நிருபர்கள், முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பிறகு தமிழகத்தை ஆளும் தகுதி நடிகர் ரஜினி காந்துக்கு தான் உள்ளது என்று தொல்.திருமாவளவன் கூறி இருக்கிறாரே? என்று கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த கனிமொழி தமிழகத்தை ஆளும் தகுதியும், திறமையும் மு.க.ஸ்டாலினுக்கு மட்டும் உள்ளது. இது தொடர்பாக நிறைய ஊடகங்கள் கருத்து கணிப்பு நடத்தியது. அதில் அவர் தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்று எதிர்பார்ப்பதாக பெரும்பாலான பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே ஸ்டாலின்தான் அடுத்த முதல்வராக வருவார். ஸ்டாலின் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதே எனது விருப்பம். மற்ற கட்சிகள் ஆட்சிக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார் கனிமொழி.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
kanimozhi mp has said DMK working president m.k.stalin will come as the next Chief Minister of tamilnadu
Please Wait while comments are loading...