ஏலம் விடப்படும் உள்ளாட்சி பதவிகள்... தேர்தல் ஆணையம் கடும் எச்சரிக்கை!
சென்னை: உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகளை ஏலம் விட்டால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக வரும் 17 மற்றும் 19-ந்தேதிகளில் நடைபெறுகிறது. கிராமப் பகுதிகளில் வாக்குச் சீட்டு முறையும், நகர்புறங்களில் மின்னணு எந்திரம் மூலமும் வாக்குப் பதிவு நடத்த தமிழக தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

இதனிடையே சில இடங்களில் உள்ளாட்சி பதவிகள் ஏலம் விடப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
உள்ளாட்சி தேர்தலில் மக்கள் வாக்களித்து, தேர்தல் மூலம் நிரப்பப்பட வேண்டிய பணி இடங்களை சில இடங்களில் ஏலம் விட்டு நிரப்ப உள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இத்தகைய சட்டத்திற்கு புறம்பான ஜனநாயக நெறிமுறைகளுக்கு ஊறு விளைவிக்கும் செயல்பாடுகளை தடுப்பதுடன் இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப் பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுகுறித்து அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவுரைகளை வழங்கியுள்ளது. மேலும் இது போன்ற செயல்கள் மக்களாட்சிக்கு எதிரானவை என்பதை மக்கள் உணரச் செய்வதற்கு உரிய நடவடிக்கை மேற் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications