உள்ளாட்சித் தேர்தல் களம் சூடுபிடிக்கிறது: மாநில தேர்தல் ஆணையம் இன்று தேதி அறிவிப்பு
சென்னை: உள்ளாட்சி தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ தேர்தல் தேதி குறித்து இன்று அறிவிப்பு வெளியிடப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி என நான்கு வகையான உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2011ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 மற்றும் 19ம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. தற்போது, இந்த அமைப்புகளுக்கான 5 ஆண்டு பதவி காலம் வருகிற அக்டோபர் 24ம் தேதியுடன் முடிவடைகிறது.

இதனால், அக்டோபர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டிய கட்டாயம் மாநில அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உள்ளாட்சித் தேர்தலை அக்டோபர் மாதம் திட்டமிட்டபடி நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தேர்தல் செலவுக்கான நிதியும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகளில் தமிழக அரசு உயர் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அரசு அண்மையில் அறிவித்தது. இந்த நடைமுறை இந்த தேர்தலில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அதனால் பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் எந்தெந்த இடங்களை ஒதுக்கீடு செய்யலாம் என்ற பணியை அதிகாரிகள் ஏற்கனவே தொடர்ந்து நடத்தி வந்தனர். தற்போது இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளது.
வாக்காளர் பட்டியல், தொகுதி ஒதுக்கீடு மற்றும் ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடு, ஊழியர்களுக்கு பயிற்சி ஆகியவையும் நடந்து வருகின்றன. இந்த பணிகள் அனைத்தும் இன்னும் ஒரு சில நாட்களில் முடிந்து விடும். அது மட்டுமல்லாமல் முதற்கட்டமாக தேர்தலை எந்தெந்த தேதிகளில் நடத்துவது என்பதையும் மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்து விட்டது. இதனால், எந்த நேரத்திலும் உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சிகளிடையே நிலவி வந்தது.
இதைத் தொடர்ந்து அதிமுக இன்று விருப்பமனுக்களை வாங்கத் தொடங்கியுள்ளது. திமுக, பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்படும் தேதியை அறிவித்துள்ளன. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, மாநில தேர்தல் ஆணைய செயலாளர் டி.எஸ்.ராஜசேகர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு இன்று தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளாட்சி தேர்தலை கடந்த முறை போன்று 2 கட்டமாக நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications