கடலூரில் வீடுகளை இழந்தோருக்கு வீடு கட்டித் தரப்படும்; ஓ. பன்னீர்செல்வம் உறுதி
கடலூர்: வெள்ளத்தால் பாதிப்படைந்த கடலூரில் வீடுகளை இழந்தோருக்கு வீடு கட்டித் தரப்படும் என்று தமிழக நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்
கடலூரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை தமிழக அமைச்சர்கள் ஒ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் பார்வையிட்டனர். இதையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர், சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப்பணிகள் குறித்து கடலூரில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 6 அமைச்சர்கள் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது கூறுகையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை சிறப்பாக பணியாற்றுகிறது. 15 ஏரிகளில் ஏற்பட்ட உடைப்பு சரிசெய்யப்பட்டு 14 ஏரிகளில் சீரமைப்பு பணி நடைபெறுகிறது. வெள்ளத்தில் சேதமடைந்த 45 வீடுகளை ரூ.10 கோடி செலவில் சீரமைக்கப்படும். பாதிக்கப்பட்ட 45 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
போக்குவரத்து பாதிக்கப்பட்ட 9 வழித்தடங்களில் 7 வழித்தடங்களில் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. 370 கி.மீ. தூர சாலைகள் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். கடலூரில் வீராணம் உள்ளிட்ட ஏரிகள் மூலம் பாதிப்பு ஏற்படாதவண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் 210 கி.மீ. தூரத்திற்கு மின்கம்பிகள் மாற்றப்பட்டுள்ளன. கடலூரில் 683 ஊராட்சிகளில் 676க்கு மின் விநியோகம் வழங்கப்பட்டது. வெள்ளத்தால் பழுதடைந்த 1,850 மின்கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளன என்று அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார்.
மேலும், கடலூரில் சீரமைப்பு பணிகள் வரும் 18ம் தேதிக்குள் முழுமை பெறும் என்று அமைச்சர்கள் கூட்டாக தெரிவித்தனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications