கள்ளக்குறிச்சி மாணவி மரணம்! ஆரம்பக்கட்ட விசாரணையில் குறைபாடுகள்? குழந்தைகள் ஆணைய அதிகாரிகள் பகீர்!
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு தொடர்பாக, கனியாமூரில் உள்ள சம்மந்தப்பட்ட தனியார் பள்ளியில் மாநில, தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
Recommended Video
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த, கடலூர் மாவட்டம், பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மாணவியின் உயிரிழப்புக்கு நீதிகேட்டு, மாணவியின் உறவினர்கள், பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது.

போராட்டக்காரர்கள், பள்ளியை அடித்து சூறையாடினர். பள்ளியின் பேருந்துகள் உள்பட உடமைகள் போராட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டன.
இதனால், அப்பள்ளி இயங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பான வழக்கு, சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், கனியாமூர் பள்ளியில் கலவரம் நிகழ்ந்த இடத்தில் தடயவியல் துறையினரும் ஆய்வு செய்தனர். ஆய்வுப்பணிகள் நிறைவடைந்த நிலையில், ஒரு வாரத்தில் அறிக்கையை, சிபிசிஐடி போலீசார் மற்றும் சிறப்பு புலனாய்வு குழுவினரிடம் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, கள்ளக்குறிச்சியில் பாதிப்புக்குள்ளான பள்ளி மாணவர்களுக்கு இன்றமுதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கவுள்ளது. அதேபோல், 9 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. தற்காலிகமாக இந்த வகுப்புகளும் இதே பள்ளி ஆசிரியர்களைக் கொண்டே பாடம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். எனினும், ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதுற்கு மாணாக்கர்களின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, உயிரிழந்த மாணவியின் சொந்த ஊரான பெரியநெசலூரில் பெற்றோரிடம் மாநில, தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினர். இதனையடுத்து, கனியாமூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியிலும் ஆய்வு நடத்தப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் மற்றும் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகளான பிரியங்கா கனுங்கோ, தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய குழுவினர் 2-பேர், மாநில ஆணைய குழு தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தலைமையிலான குழுவினர் சம்மந்தப்பட்ட பள்ளியை ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது, மாணவி உயிரிழந்த இடம் மற்றும் பள்ளி வளாகம் உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்தனர். பின்னர் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டமும் நடைபெற்றது.
ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகளான பிரியங்கா கனுங்கோ, கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில் மாணவி உடல் கூறு ஆய்வு செய்த மருத்துவர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் குழந்தை பாதுகாப்பு அலுவலர் மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் இதர அதிகாரியிடம் விசாரணை நடைபெற்றது.
இதில் முதற்கட்டமாக பள்ளியில் ஆய்வு செய்த போது அந்த மாணவி இறந்த இடத்தை மற்றும் தங்கும் விடுதியை ஆய்வு செய்த பொழுது சில தகவல்கள் பெறப்பட்டுள்ளன. மேலும் நாங்கள் கவனித்தது வரை ஆரம்பக்கட்ட விசாரணையில் சில குறைபாடுகள் இருப்பதாக தெரிகிறது. அவற்றில் முக்கியமாக அந்த பள்ளி விடுதிக்கு உரிய அலுவலரிடம் இருந்து உரிமம் பெறாமல் உள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலகம் விசாரணை செய்து அறிக்கை இந்திய அரசிடமும் தமிழக அரசிடமும் ஒப்படைக்கப்படும்." என்றார்
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications