முரசொலி செல்வம் மீதான அவதூறு வழக்குகளுக்கு இடைக்கால தடை
சென்னை: முரசொலி செல்வம் மீதான 12 அவதூறு வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
முரசொலி செல்வம் மீது அதிமுக அரசு தொடர்ந்த 12 அவதூறு வழக்குகள், எம்.பி., எம்எல்ஏ மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன. சிறப்பு நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து, முரசொலி செல்வம் உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்தார்.

தான் எம்.பி., எம்எல்ஏவாகவோ மக்கள் பிரதிநிதியாகவோ இருந்ததில்லை என்று செல்வம் தனது மனுவில் தெரிவித்திருந்தார். தம் மீதான வழக்குகளை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியது தவறு என செல்வம் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி மகாதேவன் முன்னிலையில் நடைபெற்று வந்தது.
இன்று வழக்கு, விசாரணைக்கு வந்தபோது, செல்வம் மீதான வழக்கு விசாரணைக்கு 2 வாரத்துக்கு தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இது தொடர்பாக அரசு தரப்பு பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
[நக்கீரன் கோபால் கைதில் ஆளுநருக்கு ஆதரவாக பேசிய டிடிவி தினகரன்.. என்ன காரணம்?]
மறைந்த, முன்னாள் முதல்வர், கருணாநிதியின் அக்கா மகன்தான் முரசொலி செல்வமாகும். முரசொலி மாறனின் சகோதரர்.
-
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டேன்ஸ் ஆடும் போது தகராறு.. கார் ஏற்றி இளம்பெண் கொலை! -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications