Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதல் மனைவியின் குழந்தைகளுக்கு சூடு வைத்த சித்தி – ஈரோட்டில் பரிதாபம்!

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோட்டில் சிறுவயது பெண் குழந்தை ஒன்றிற்கு தந்தையின் இரண்டாவது மனைவி சூடு வைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு நாடார் மேட்டை சேர்ந்தவர் அப்துல் வகாப் கூலித் தொழிலாளி. இவரது மனைவி மெகதாஜ் பானு.

இவர்களுக்கு முகமது இப்ராகிம், என்ற மகளும் மகிமா பேகம் என்ற மகளும் உள்ளனர்.

முதல் மனைவி தற்கொலை:

கடந்த 10 மாதங்களுக்கு முன்பு கணவன் , மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மெகதாஜ் பானு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இரண்டாம் திருமணம்:

இதனால் குழந்தைகளை கவனித்து கொள்ளவும் உறவினர்களின் வற்புறுத்தலின் பேரிலும் அப்துல் வகாப் தாஜ் தவுலத் என்ற பெண்ணை 2 ஆவதாக திருமணம் செய்து கொண்டார்.

கர்ப்பமான இரண்டாம் மனைவி:

திருமணம் ஆகி 2 மாதங்கள் தாஜ் தவுலத் தனது கணவனுடன் சந்தோசமாக குடும்பம் நடத்தினார். இதன் காரணமாக அவர் கர்ப்பம் அடைந்தார்.

முதல் குழந்தைகள்:

இருப்பினும் தனது கணவர் முதல் மனைவியின் குழந்தைகளை அன்பாக கவனித்து கொள்வதை தாஜ் தவுலத்தால் பொறுத்துகொள்ள முடியவில்லை.

நேர்த்திக் கடன்:

இந்த நிலையில் நேர்த்தி கடன் செலுத்த வேண்டும் என்று கூறிவிட்டு தாஜ் தவுலத் முகமது இப்ராகிம், மகிமாபேகத்தை அழைத்து கொண்டு ஏர்வாடி சென்றார்.

கொடுமை செய்த சித்தி:

பிறகு அங்கிருந்து கூடலூர் நடுவட்டத்துக்கு அவர்களை அழைத்து சென்றார். அப்போது அப்துல் வகாப்பின் குழந்தைகளை அவர் அடித்து மேலும் சிறுமி மகிமா பேகத்துக்கு சூடுவைத்து கொடுமைப்படுத்தியுள்ளார்.

தீவிர சிகிச்சை:

இதைதொடர்ந்து மகிமா பேகம் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தவுலத் மற்றும் அவரது தாயாரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகின்றது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+