ஸ்டெர்லைட் ஆலை கந்தக அமில கசிவு.. சீர் செய்யும் பணி தீவிரம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்ட கந்தக அமில கசிவை சீர் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்ட கந்தக அமில கசிவை சீர் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமைதியாக போராட்டம் நடத்தி வந்தார்கள். இதில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். அதன்பின் மக்கள் கோரிக்கையை ஏற்று ஆலை மூடப்பட்டது.

இந்தநிலையில் நேற்று பரபரப்பூட்டும் வகையில் ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலக் கிடங்கில் லேசான கசிவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். இதனால் அங்கு பணிக்கு இருந்த காவலர், இதனால் மயங்கி விழுந்துள்ளார்.
பழைய குழாயில் இருந்து ரசாயன கசிவு ஏற்பட்டிருப்பதாக புகார் வந்துள்ளது. இப்புகாரின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையில் நேற்று அதிகாரிகள் குழு ஆய்வு நடத்தினர். இக்குழுவில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர்.
இதை அப்புறப்படுத்தப்படும் பணி இன்று தொடங்கும் என்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்குள் கந்தகஅமிலக் கிடங்கில் ஏற்பட்ட கசிவை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. மீண்டும் கசிவு ஏற்படாத வண்ணம் சரிசெய்யப்பட்டு வருகிறது. கந்தக அமிலத்தை அகற்ற டேங்கர்லாரி பயன்படுத்தப்பட்டு வருகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications