For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆலையை மூடியது அரசு அல்ல.. போராடி உயிர் நீத்த மாவீரர்களே!

Google Oneindia Tamil News

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது குறித்து மக்கள் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த வெற்றிக்கு அரசியல் கட்சிகள் யாரும் உரிமை கொண்டாட முடியாது என்று மக்கள் அடித்துக் கூறியுள்ளனர். அறவழியில் போராடி உயிர்நீத்த தியாகிகளே இதற்கு முழுக் காரணமும் ஆவர் என்றும் நெகிழ்ச்சியுடன் தலைவர்களும், மக்களும் கருத்துக்களைக் கண்ணீருடன் பதிவிட்டு வருகின்றனர்.

மக்களின் கண்ணீர் பதிவுகளிலிருந்து சில..

13 உயிர்கள் பறிபோனதே

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது என்ற தமிழக அரசின் முடிவு வரவேற்கத்தக்கது என்றாலும், இது மிக மிக தாமதமானது. 100 நாட்களுக்கு மேல் போராடும் மக்களோடு பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால், விலை மதிக்க முடியாத 13 உயிர்கள் காப்பாற்றப் பட்டிருக்கும்.

ஆலையை மூடியது அரசு அல்ல;

ஆலையை மூடியது அரசு அல்ல; அறவழியில் போராடி மடிந்த மாவீரர்களே!

தூத்துக்குடி மக்களுக்கு வெற்றி

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருப்பது தன்னெழுச்சிப் போராட்டத்தை முன்னெடுத்த தூத்துக்குடி மக்களுக்கான வெற்றியே.

ஸ்டெர்லைட் ஆலைக்கு பூட்டு

ஒன்று சேர்ந்தால் உண்டு வாழ்வு. ஸ்டெர்லைட் ஆலைக்கு பூட்டு.

English summary
Leaders of various Political parties welcome the move by the TN government to shut down sterlite plant. But this move would have been taken earlier, 13 lives could be saved.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X