For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எங்கள் பண்பாட்டு அடையாளத்தை நிலைநாட்ட யார் அனுமதிக்க வேண்டும்? தடையை மீறி கரிசல்குளத்தில் ஜல்லிகட்டு

எங்கள் விளையாட்டை விளையாட யார் அனுமதியும் எங்களுக்கு தேவை இல்லை என்று தடையை மீறி மதுரையில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. இதனால் மதுரையில் பரபரப்பு நிலவி வருகிறது.

Google Oneindia Tamil News

மதுரை: மதுரையில் உள்ள கரிசல்குளத்தில் உள்ள மைதானம் ஒன்றில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதற்கான ரகசிய ஏற்பாடுகளை அப்பகுதி மக்கள் செய்தனர்.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க மத்தியில் ஆளும் பாஜக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், மாணவர்கள், இளைஞர்கள், மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Stir continues, Jallikattu held in Madurai.

இந்நிலையில், இன்று மதுரை கரிசல்குளத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதற்கான ரகசிய ஏற்பாடுகளை இப்பகுதி மக்கள் செய்திருந்தனர். மைதானத்தில் வாடிவாசல் அமைக்கப்பட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து வடமஞ்சு விரட்டு என்று சொல்லக் கூடிய காளையின் கழுத்தில் கயிறு கட்டி விளையாடும் விளையாட்டும் நடத்தப்பட்டது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி இந்த ஜல்லிக்கட்டு நடைபெறுவதால் மதுரையில் பதற்றம் நிலவி வருகிறது. இதுகுறித்து இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் கூறும் போது, "உச்ச நீதிமன்றம் தடை விதித்தாலும் தடையை மீறி நாங்கள் ஜல்லிக்கட்டை நடத்துவோம். எங்கள் விளையாட்டை விளையாட நாங்கள் யாரை கேட்க வேண்டும். எங்கள் உரிமை இது" என்று ஆவேசமாக கூறினார்கள்.

தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதால், இளைஞர்கள் அந்தப் பகுதியில் குவிந்தனர். இதனையடுத்து போலீசார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

English summary
Amid the continuing protests across TN for allowing jallikattu during Pongal, the bull taming sport was conducted at Karisalkulam in Madurai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X