அலங்காநல்லூரில் 2வது நாளாக விடிய விடிய தொடரும் போராட்டம்.. அணி அணியாய் திரளும் வெளிமாவட்ட இளைஞர்கள்
அலங்காநல்லூர் வாடிவாசல் பகுதியில் விடிய விடிய கிராம மக்கள் ஜல்லிக்கட்டுக்காக போராடி வருகின்றனர். இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அவர்களோடு ஒன்றிணைத்துள்ளதால் பதற்றம் தொடர்ந்து வருகிறது.
மதுரை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அலங்காநல்லூரில் விடிய விடிய போராட்டம் நடைபெற்றது. வாடி வாசல் பகுதி அருகே கிராம மக்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றதால் அங்கு பதற்றம் நீடிக்கிறது.
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரி நேற்று முன்தினம் போராட்டம் தொடங்கியது. நேற்று முன்தினம் இரவும் விடிய விடிய போராட்டம் நடைபெற்றது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தை நிறுத்தவில்லை. இதனைத் தொடர்ந்து, 2 வது நாளாக பல மணி நேரம் போராட்டம் நடத்தியவர்களை போலீசார் தடியடி நடத்தி கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, போலீசாரின் கைது நடவடிக்கையை கண்டித்து ஆயிரக்கணக்கான மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சென்னை, திருச்சி, சேலம், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் தீவிரம் அடைந்தன.

முதல்கட்ட விடுப்பு
இதனை அடுத்து, முதல்கட்டமாக காளைகளை அவிழ்த்துவிட்டதாக நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட 38 பேரை போலீசார் விடுதலை செய்தனர். நேற்று காலையில் தடியடி நடத்தி கைது செய்யப்பட்ட 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வாடிப்பட்டியில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டது.

உள்ளிருப்பு போராட்டம்
வெளியே பொதுமக்கள் விடுதலை கேட்டு போராட்டம் நடத்திக் கொண்டிருந்த அதே வேளையில், கைது செய்து மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த மாணவர்களும் இளைஞர்களும் கோரிக்கை நிறைவேறும் வரை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அறிவித்து விடுதலையாக மறுத்தனர்.

சீமான், அமீர் பேச்சுவார்த்தை
இதனையடுத்து, திரைப்பட இயக்குனர்கள் சீமான் மற்றும் அமீர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அவர்கள் நடத்திய நீண்ட நேர பேச்சுவார்த்தையை தொடர்ந்து கைது செய்யப்பட்டோர் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இதனையடுத்து அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

தொடரும் போராட்டம்
இந்நிலையில், அலங்காநல்லூர் கிராம மக்கள், இளைஞர்கள், மாணவர்கள் என அனைவரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மத்திய மாநில அரசுகள் உறுதிமொழி அளிக்கும் வரையில் தொடர்ந்து 2வது நாளாக இன்றும் விடிய விடிய போராட்டம் நடத்தினர்.

அணி அணியாய்..
இதனையடுத்து, அலங்காநல்லூரை சுற்றி உள்ள அனைத்து கிராமங்களில் இருந்தும் கிராம மக்கள் போராட்ட களத்தை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். மேலும், மாணவர்கள், இளைஞர்கள் என அனைவரும் அணி அணியாய் திரண்டு வருகின்றனர். இதனால் அலங்காநல்லூரில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications