மாணவர்கள் விடுதலை கோரி வாடிப்பட்டி, விழுப்புரம், புதுக்கோட்டையில் மறியல்.. கொந்தளிப்பில் தமிழகம்
மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. வாடிப்பட்டி, விழுப்புரம், புதுக்கோட்டையில் தொடர் மறியல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
வாடிப்பட்டி: அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வாடிப்பட்டியில் மறியல் போராட்டம் நடைபெற்றுள்ளது. வாடிப்பட்டியை சுற்றியுள்ள கிராம மக்கள் இந்த மறியலில் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினார்கள்.
ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று அலங்காநல்லூரில் 21 மணி நேரம் போராட்டம் நடத்திய மாணவர்களை போலீசார் தடியடி நடத்தி கைது செய்துள்ளனர். இவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து வாடிப்பட்டியில், சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து கிராம மக்களும் ஒன்று திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று கிராம மக்கள் கூறியுள்ளனர்.

வாடிப்பட்டி மறியல்
கைது செய்யப்பட்டவர்களை நேரில் பார்க்கச் சென்றவர்களில் ஒருவர் பேசும் போது, மாணவர்களுக்கு போலீசார் தண்ணீர் கூட கொடுக்கவில்லை. இன்று நாங்கள் சென்று பார்த்த போது உணவு உண்ண கொடுத்தாலும் மாணவர்கள் வாங்க மறுக்கின்றனர். அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் பிறபிக்கும் வரை உணவு உண்ணப் போவதில்லை என்று மாணவர்கள் தெரிவித்துள்ளதாக அவர்கள் கூறினார்கள்.

புதுக்கோட்டைப் போராட்டம்
இதேப் போன்று அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி புதுக்கோட்டையில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க கோரி வன்னியன் விடுதியில் இளைஞர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

விழுப்புரத்தில் மறியல்
அலங்காநல்லூர் மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும என்ற அதே கோரிக்கையை முன் வைத்து விழுப்புரத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதுதவிர, விழுப்புரத்தில் தடையை மீறி மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஜல்லிக்கட்டு நடத்தினார்கள். அவர்களை போலீசார் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர்.

திருச்சியில் மவுன போராட்டம்
அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்யக் கோரி திருச்சியில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஒன்று கூடிய கல்லூரி மாணவர்கள் மவுன போராட்டம் நடத்தியுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications