"சுப்பிரமணியபுரத்தில்" மு.க.ஸ்டாலின் பிரசார வேன் மீது கல்வீசிய அழகிரி ஆதரவாளர்!!
மதுரை: மதுரையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வேன் மீது மு.க. அழகிரியின் ஆதரவாளர் ஒருவர் கல்வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரை லோக்சபா தொகுதி தி.மு.க. வேட்பாளர் வேலுச்சாமியை ஆதரித்து மதுரையில் பல்வேறு இடங்களில் நேற்று திறந்தவேனில் இருந்தபடி தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார். புதூர், ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் பிரசாரம் செய்து விட்டு, சுப்பிரமணியபுரம் பகுதியில் வேனில் இருந்தபடி பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது கூட்டத்தில் நின்று இருந்த ஒருவர்திடீரென்று தகராறு செய்துள்ளார். இதைப்பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அவரை அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் அங்கிருந்து செல்ல மறுத்த அவர் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டார்.
அத்துடன் திடீரென்று அந்நபர் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டார். இதில் ஒரு கல் மு.க.ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்த வேன் மீது விழுந்ததால் பதற்றம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து கல்வீசிய நபரை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில் கல்வீசியவரும் திமுகவைச் சேர்ந்தவர் என்றும் ஆனால் மு.க. அழகிரியின் ஆதரவாளர் என்பதும் தெரியவந்தது. இதனால் திமுகவினர் எந்த புகாரும் கொடுக்காமல் சென்றுவிட்டனர். போலீசாரும் அந்நபரை விடுவித்துவிட்டனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications