For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் தொடர் மரணம் – எஸ்.டி.பி.ஐ கட்சி போரட்டம்

Google Oneindia Tamil News

சென்னை:அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் தொடர் மரணம் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

தமிழக அரசு மருத்துவமனைகளில் தொடரும் குழந்தைகள் உயிரிழப்புகளை கண்டித்தும், போதிய மருத்துவர்களை நியமிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் மருத்துவ கல்வி இயக்ககத்தை முற்றுகையிட்டு எஸ்.டி.பி.ஐ கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தருமபுரி மற்றும் சேலம் அரசு மருத்துவமனைகளில் அடுத்தடுத்து குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியும் வேதனையும் ஏற்படுத்தியது. ஊட்டச்சத்து குறைபாடு, மருத்துவமனை ஊழியர்களின் கவனக் குறைவு மற்றும் மருத்துவர்கள், சிறப்பு மருத்துவர்கள் செவிலியர் உள்ளிட்ட பிற பணியாளர்களும் போதிய எண்ணிக்கையில் இல்லாததே குழந்தைகளின் உயிரிழப்பிற்கு காரணம்.

எனவே:

* அரசு மருத்துவமனைகளில் தொடரும் குழந்தைகள் மரணத்தை கண்டித்தும்.

* தொடரும் குழந்தைகளின் மரணத்தை தடுக்க கோரியும்.

* அரசு மருத்துவர்கள் தனியாக மருத்துவமனைகள் நடத்துவதை தடைவிதிக்க கோரியும்.

* அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை தரம் உயர்த்திட வலியுறுத்தியும்.

* மருத்துவர்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்கள்

பற்றாக்குறையை நீக்கி தேவையான மருத்துவர்களை நியமிக்க கோரியும்.எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள (DMC) அரசு மருத்துவ கல்வி இயக்ககத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

English summary
STPI party members protest in Kilpakkam for appoint qualified doctors in Hospitals.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X