தாம்பரம் அருகே லிப்ட்டுக்குள் மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற மாணவர்கள் கைது!
தாம்பரம்: சென்னையை அடுத்த தாம்பரம் அருகே லிப்ட்டுக்குள் வைத்து மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற மாணவர்களைப் பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் பல்விலால் இஷா. இவர் பொத்தேரியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்து காட்டாங்கொளத்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பி.ஏ 3 ஆம் ஆண்டு படித்து வருகிறார். பகுதி நேரமாக ஒரு தனியார் நிறுவனத்திலும் வேலை பார்த்து வருகிறார்.

அதே அடுக்குமாடி குடியிருப்பில் பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த சரத்குமார், உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த சந்தன்குமார் ஆகிய இரு மாணவர்களும் தங்கி இருக்கிறார்கள். இவர்களும் இஷா படிக்கும் கல்லூரியில் எஞ்சினியரிங் இறுதியாண்டு படித்து வருகிறார்கள்.
பல்விலால் இஷா நேற்று இரவு 10.30 மணியளவில் பணி முடிந்து வீடு திரும்பினார். மேல் தளத்தில் உள்ள தனது வீட்டுக்கு செல்வதற்காக லிப்டுக்கு சென்றார். அப்போது அங்கு நின்ற மாணவர்களும் லிப்டில் ஏற வந்தனர். உடனே இஷா அவர்களிடம் நீங்கள் முதலில் செல்லுங்கள், நான் அடுத்து வருகிறேன் என்றார்.
ஆனால் மாணவர்கள் இருவரும் இஷாவையும் லிப்டுக்குள் தள்ளி அவர்களும் ஏறிக் கொண்டனர். லிப்டு மேலே செல்லும் போது இவரும் இஷாவின் கையை பிடித்து இழுத்து சில்மிஷம் செய்து பலாத்காரம் செய்ய முயன்றனர். ஆனால் இஷாவால் எதுவும் செய்ய முடியவில்லை. மேல் தளத்தில் லிப்டு திறந்ததும் கத்தி கூச்சல் போட்டார். உடனே பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடி வந்தனர். அவர்கள் மாணவர்கள் இருவரையும் பிடித்து கொண்டனர்.
பின்னர் மறைமலைநகர் போலீசுக்கு தகவல் தெரிவித்து மாணவர்கள் சரத்குமார், சந்தன்குமார் இருவரையும் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்கள் மீது பலாத்கார முயற்சி, பெண்கள் வன்கொடுமை சட்டம் ஆகிய பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications