மாட்டுக்காக திரண்டது போல காவிரி நீருக்காக ஒன்று திரள்வோம்... இளைஞர்களுடன் கைகோர்த்த மக்கள்!
சென்னை மெரினா கடற்கரையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுடன் பொதுமக்களும் ஒன்று சேர்ந்துள்ளனர்.
Recommended Video

சென்னை : ஜல்லிக்கட்டு போராட்டத்திற்காக மெரினா கடற்கரையில் இளைஞர்கள் ஒன்று கூடியது போல காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று கூடி கடற்கரைப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இளைஞர்களுக்கு ஆதரவாக கடற்கரையில் பொழுதுபோக்கிற்காக வந்திருந்த பொதுமக்களும் ஒன்று சேர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி 2017 ஜனவரியில் சிறிய அளவில் இளைஞர்கள் சென்னை மெரினாவில் தொடங்கிய போராட்டமானது விஸ்வரூபமெடுத்தது. தமிழர்கள் ஒன்றுகூடினால் யாராலும் அசைத்து பார்க்க முடியாது என்பதை நிரூபித்தது மெரினா போராட்டம். இளைஞர்களின் இந்த போராட்டத்தின் வெற்றியாக ஜல்லிக்கட்டு மீதான தடை நீக்கப்பட்டு இந்த ஆண்டு எந்த தடையும் இன்றி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியவாறு சென்னை மெரினாவில் கடற்கரைப் பகுதியில் இளைஞர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இளைஞர்களின் இந்த போராட்டம் முகநூலில் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். இளைஞர்களின் போராட்டம் முகநூலில் நேரலை செய்யப்பட்டது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதால் பல இளைஞர்கள் மெரினாவை நோக்கி படையெடுப்பதால் போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் இளைஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக மெரினா கடற்கரையில் விடுமுறை கொண்டாட்டத்திற்காக வந்திருந்த பொதுமக்களும் பங்கேற்றுக் கொண்டு குரல் எழுப்பினர். காவிரி நீரானது விவசாயிகளுக்கு மட்டுமல்ல தமிழக மக்களுக்கும் தான் தேவை என்பதை உணர வேண்டும்.
ஸ்டெர்லைட் ஆலையால் புற்றுநோய் பாதிப்பிற்கு ஆளாகி இருக்கும் அந்தப் பகுதி மக்களின் நிலை நாளை நமக்கும் கூட வரலாம் என்று போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறியுள்ளனர். விவசாயிகளை காப்பாற்ற வேண்டும், மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்று தான் நாங்கள் இங்கு போராட்டத்தில் இறங்கி இருக்கிறோம்.

எங்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைத்தல் நாங்கள் ஏன் போராட்டத்தில ஈடுபடப் போகிறோம். உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை நிறைவேற்றுங்கள் என்று தான் மத்திய, மாநில அரசுகளை நாங்கள் கேட்கிறோம்.
சென்னை மெரினாவில் போராட்டம் நடத்த வேண்டும் என்று இளைஞர்களுக்கும் ஆசையில்லை. போலீசாரின் தடையை மீறி எங்களின் உரிமைக்காகத் தான் நாங்கள் போராடுகிறோம், இது நியாயமான விஷயம் என்பதால் தான் மக்களும் எங்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்றும் போராட்டத்தில் இளைஞர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications