காமென்வெல்த் மாநாட்டுக்கு தமிழகத்தில் வலுக்கும் எதிர்ப்பு... மாணவர்கள் போராட்டம்
ஈரோடு: இலங்கையில் நடைபெறும் காமென்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என வலியுறுத்தி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்களும், தமிழ் ஆர்வலர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்னும் சில தினங்களில் காமன்வெல்த் மாநாடு நடைபெற உள்ளது. இதில் இந்தியாவின் சார்பில் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என்று தமிழ் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அரசியல் கட்சியினரும் இதேயே கூறி வருகின்றனர். தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கூட்டமைப்பின் சார்பில் ஈரோடு பேருந்து நிலையம் முன்பாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
அப்போது, இலங்கையில் நடைபெறும் காமென்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தி மாணவர்கள் முழக்கமிட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில், தமிழின உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், காமென்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர்கள் முழக்கமிட்டனர்.












Click it and Unblock the Notifications