மாணவர்கள் சாலை மறியல்.. 25 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் ஸ்தம்பிப்பு.. முடங்கியது ஓஎம்ஆர்
போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியதைக் கண்டித்து மாணவர்கள், இளைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் பழைய மகாபலிபுரம் சாலையில் 25 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து முடங்கியுள்ளது. என்ன செய்வது என்று தெ
சென்னை: சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் மாணவர்கள், ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலையில் இருந்து மெரினாவில் போராட்டம் நடத்திய மாணவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை முழுவதும் ஆங்காங்கே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதே போன்று பழைய மகாபலிபுரம் சாலையில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த மறியலால் 25 கி.மீ தூரம் வரை சாலை முடக்கப்பட்டுள்ளது. இதனால் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
இதே போன்று, சென்னை தரமணியிலும் மாணவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தரமணியில் நடக்கும் மறியல் போராட்டத்தில் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்று போலீசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனால் தரமணியில் இருந்து திருப்போரூர் வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னை கோடம்பாக்கம், கீழ்ப்பாக்கத்திலும் சாலை மறியல் நடைபெற்று வருவதால் சென்னை முழுவதும் போக்குவரத்து கடுமையாக பாதிப்படைந்துள்ளது. சென்னையில் முக்கிய சாலையான அண்ணா சாலை, காமராஜர் சாலை, டாக்டர் நடேசன் சாலைகளிலும் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications