ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக மெரினாவில் போராட்டம்.. 35 பேர் கைது
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளைக் கண்டித்து மெரினா உழைப்பாளர் சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் 35 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை : தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளைக் கண்டித்து மெரினா உழைப்பாளர் சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் 35 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஜல்லிக்கட்டிற்கு தடையை நீக்க வலியுறுத்தி கடந்த ஜனவரி மாதம் மெரினாவில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மெரினாவில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சமூக வலைதளம் மூலமாக ஒன்றிணைந்த 35 மாணவர்கள் தடையை மீறி மெரினா உழைப்பாளர் சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் தற்போது உள்ள பல்வேறு பிரச்சனைகளைக் கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.
அப்போது அவர்கள், நெடுவாசல் ஹட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் கைவிட வேண்டும். விவசாய நிலத்தில் குழாய்கள் பதிக்கும் திட்டத்தை கெயில் நிறுவனம் கைவிடவேண்டும்.
தாமிரபரணியில் பெப்சி, கோக் குளிர்பான நிறுவனங்களுக்கு தாமிரபரணியில் இருந்து தண்ணீர் எடுக்க அனுமதி வழங்கக்கூடாது. கச்சத்தீவு கடல் பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு கடற்படை பாதுகாப்பு அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இந்நிலையில் போரட்டத்தில் ஈடுபட்ட அனைத்து மாணவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications