பிளஸ் டூவில் ஸ்கூல் ஃபர்ஸ்ட், செகண்ட் வந்த சகோதரிகள் தூக்கு போட்டு தற்கொலை
கடலூர்: விருத்தாசலம் அருகே பிளஸ் டூ தேர்வில் பள்ளியில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தை பிடித்த சகோதரிகள் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்து உள்ள கம்மாபுரத்தைச் சேர்ந்தவர் முருகேசன். தச்சுத் தொழிலாளி. அவரது மனைவி ராஜலட்சுமி. கணவன் மனைவி இருவரும் இதய நோயாளிகள். அவர்களுக்கு கிருத்திகா(18), சரண்யா(17) என்ற மகள்களும், ஹரிச்சந்திரன் என்ற 10ம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர்.
கம்மாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த கிருத்திகாவும், சரண்யாவும் பிளஸ் டூ தேர்வில் 930 மற்றும் 928 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலாவது மற்றும் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளனர். ஆனால் அவர்களை மேற்கொண்டு படிக்க வைக்க முருகேசனால் முடியவில்லை. மருத்துவமனையும், வீடுமாக இருக்கும் முருகேசனும், ராஜலட்சுமியும் கிருத்திகாவுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அவருக்கு திருமணம் செய்து வைத்துவிட்டால் தங்களுக்கு ஏதாவது நடந்தாலும் இளைய மகளை அவர் பார்த்துக் கொள்வார் என்று அவர்கள் நினைத்தனர்.
இது குறித்து முருகேசனும், ராஜலட்சுமியும் பேசிக் கொண்டிருந்ததை சகோதரிகள் கேட்டுவிட்டு சோகத்தில் ஆழ்ந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் முருகேசன் தனது மனைவியுடன் சுப நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்றுவிட்டார். அந்த நேரம் பார்த்து சகோதரிகள் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இந்த சம்பவம் கம்மாபுரம் கிராமத்தினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications