Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவின் தங்கை கணவர்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவின் தங்கை கணவரும் அநியாயமாக சுட்டுக்கொல்லப்பட்டார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவின் தங்கை கணவரும் அநியாயமாக சுட்டுக்கொல்லப்பட்டார்.

தூத்துக்குடியில் உயிர்கொல்லி ஆலையான ஸ்டெர்லைட்டுக்கு எதிராக இன்று 100வது நாள் போராட்டம் நடைபெற்றது.

இதையொட்டி அப்பகுதி மக்கள் ஆயிரக்கணக்கானோர் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

9 பேர் சுட்டுக்கொலை

9 பேர் சுட்டுக்கொலை

இதைத்தொடர்ந்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 17 வயது பத்தாம் வகுப்பு மாணவி உட்பட 9 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஸ்டண்ட் மாஸ்டர் வேதனை

அவர்களில் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவின் தங்கை கணவர் செல்வராஜூம் ஒருவர். தங்கள் வீட்டு மாப்பிள்ளையான செல்வராஜ் சுட்டுக்கொல்லப்பட்டதை சில்வா வேதனையுடன் தனது டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சடலமாக கிடக்கும் போட்டோக்கள்

மேலும் செல்வராஜ் குண்டடிப்பட்டு சடலமாக கிடக்கும் போட்டோக்களையும் சில்வா வெளியிட்டுள்ளார்.

தமிழ் உட்பட பல மொழிகளில்

தமிழ் உட்பட பல மொழிகளில்

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஸ்டண்ட் சில்வா ஏராளமான தமிழ் தெலுங்கு, மராத்தி மற்றும் ஹிந்தி உள்ளிட்ட படங்களில் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+