நில மோசடியில் ஈடுபட்ட பெண் சார்பதிவாளர் அதிரடி சஸ்பெண்ட்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்தது தொடர்பாக பெண் சார்பதிவாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தூத்துக்குடியை சேர்ந்தவர் ஜோசப் செல்வராஜ். இவர் அங்கு ஹோட்டல் தொழில் செய்து வருகிறார். இவரது தந்தை ஜோசப் சுனந்தா உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதை பயன்படுத்தி இவரது உறவினர்களான லீலா, எபநேசர், வதனா, இனிகோ ரன்ஸ்நெட், பொன் செந்தில்முருகன் மற்றும் தூத்துக்குடி அப்போதைய சார்பதிவாளர் எஸ்கலின் ஆகியோர் சேர்ந்து போலியாக உயில், தானபத்திரம் உள்ளிட்ட 3 ஆவணங்களை தயாரித்து சொத்துகளை அவரது பெயருக்கு மாற்றினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சார்பதிவாளர் மாவட்ட பதிவாளரிடம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் பதிவாளர் ஜெகதீசன் விசாரணை நடத்தினார். இது தொடர்பாக அவர் மாவட்ட எஸ்பி துரையிடம் புகார் செய்தார். இது குறித்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யுமாறு எஸ்பி துரை உத்தரவிட்டார்.
இதன் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் எஸ்ஐ சண்முகவடிவு, மோசடியாக ஆவணங்கள் பதிவு செய்ததாக லீலா, எபநேசர், வதனா, இனிகோ, ரனஸ்நெட், பொன் செந்தில்முருகன், இனியபுஷ்பம், எஸ்கலின் ஆகிய 6 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதற்கிடைய இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சார்பதிவாளர் சிறியபுஷ்பம் எஸ்கலின் மீது துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் அவர் மீதான குற்றச்சாட்டு உறுதியானதை தொடர்ந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications