Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கைதி சிங்காரம் கொலை: சுபாஷ் பண்ணையார் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சுபாஷ் பண்ணையார் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு | Oneindia Kannada

    தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள மூலக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். பல விளைநிலங்கள் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்ததால் சிவசுப்பிரமணியன்தான் பண்ணையார் குடும்பம்.

    இவருக்கு அசுபதி, நாராயணன் என இரண்டு மகன்கள். அசுபதியின் மகன் சுபாஷ் பண்ணையார், நாராயணனின் மகன் வெங்கடேஷ் பண்ணையார்.

    திருச்செந்தூர் அருகே உள்ள புல்லாவெளி கிராமத்தில் உள்ள நிலத்தகராறில் வங்கி மேலாளர் ராஜகோபாலுக்கும், பண்ணையார் குடும்பத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    இதுதொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையின்போது பசுபதிபாண்டியன், ராஜகோபாலுக்கு ஆதரவாக செயல்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஏற்பட்ட மோதலில் கடந்த 1993ஆம் ஆண்டு ஜனவரி 14ல் அசுபதி பண்ணையார் கொலை செய்யப்பட்டார்.

    தொடர் கொலைகள்

    தொடர் கொலைகள்

    கடந்த 1993ம் ஆண்டு ஏப்ரல் 21ல் தூத்துக்குடியில் பசுபதி பாண்டியனைக் கொலை செய்ய நடந்த முயற்சி தோல்வியடைந்தது. அதே ஆண்டு ஜூன் 8ல் சிவசுப்பிரமணியனும் கொலை செய்யப்படவே பண்ணையார் குடும்பத்திற்கும் பசுபதி பாண்டியனுக்கும் இடையே பகை நெருப்பு கொழுந்து விட்டு எரிந்தது.

    வெங்கடேஷ் பண்ணையார்

    வெங்கடேஷ் பண்ணையார்

    சிவசுப்பிரமணியன், அசுபதி மறைவுக்குப்பிறகு வெங்கடேஷ் பண்ணையார் தலைமை ஏற்றார்.
    அப்போது, சேலம் சட்டக்கல்லூரியில் படித்து வந்தார் சுபாஷ் பண்ணையார்.

    பசுபதி பாண்டியன்

    பசுபதி பாண்டியன்

    சிறுவயதில் சிங்காரத்துக்கும், சுபாஷ் பண்ணையாருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பசுபதி பாண்டியன் தரப்பிலிருந்து சிங்காரமும் பண்ணையார் குடும்பத்தினருக்கு பிரச்சினை ஏற்பட்டது. பகை நெருப்புக்கு இடையே பசுபதி பாண்டியன் திண்டுக்கல்லுக்கு இடம் மாறினார்.

    வெங்கடேஷ் பண்ணையார் எண்கவுண்டர்

    வெங்கடேஷ் பண்ணையார் எண்கவுண்டர்

    கடந்த 2003 செப்டம்பர் 26-ம் தேதி சென்னையில் போலீஸார் நடத்திய என்கவுன்டரில் வெங்கடேஷ் பண்ணையார் பலியானார். இது பசுபதி பாண்டியன் கும்பலுக்கு சாதகமான சம்பவமாகவே அமைந்தது.

    பசுபதி பாண்டியன் மனைவி கொலை

    பசுபதி பாண்டியன் மனைவி கொலை

    ஒரு வழக்கில் ஆஜராக நீதிமன்றத்துக்கு கடந்த 2006 ஏப்ரல் 7ல் தூத்துக்குடி மாவட்டம், எப்போதும்வென்றான் பகுதியில் பசுபதிபாண்டியன், அவரது மனைவி ஜெசிந்தா உள்ளிட்டோர் காரில் வந்தனர். அப்போது பண்ணையார் தரப்பு நடத்திய தாக்குதலில் ஜெசிந்தா கொலை செய்யப்பட்டார்.

    ஸ்கெட்ச் போட்டு தூக்கிய பண்ணையார் குரூப்

    ஸ்கெட்ச் போட்டு தூக்கிய பண்ணையார் குரூப்

    5ஆண்டுகள் தொடர்ந்து முயற்சி செய்து 2011ல் ஜனவரி 10ல் திண்டுக்கல் நந்தவனப்பட்டியில் பசுபதி பாண்டியன் கொலை செய்யப்பட்டார். 18 ஆண்டுகாலமாக நடந்த பழிக்கு பழி வாங்கல்கள் பசுபதி பாண்டியன் கொலையோடு முடிந்து விடும் என்றே எதிர்பார்த்தனர்.

    தொடர்கதையான கொலைகள்

    தொடர்கதையான கொலைகள்


    இதில் பண்ணையார் தரப்பைச் சேர்ந்த அருளானந்தம், ஆறுமுகசாமி உள்பட சிலர் போலீஸில் சிக்கினர்.
    பசுபதி பாண்டியனைக் கொன்றவர்களைப் பழிவாங்க 2016 மார்ச் மாதம் பழையகாயலுக்கு வந்து ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது இதில் சுபாஷ் பண்ணையார் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

    தலையை வெட்டிய கும்பல்

    தலையை வெட்டிய கும்பல்

    இந்த தாக்குதலில் ஆறுமுகசாமி கொல்லப்பட்டார். அவரது தலையைத் துண்டித்த கும்பல் தெய்வசெயல் கிராமத்துக்குக் கொண்டு சென்று பசுபதி பாண்டியனின் பெயர் பலகைக்கு கீழ் தலையை வைத்துவிட்டுச் சென்றது.

    சிங்காரம் கொலை

    சிங்காரம் கொலை

    இதற்கு பழிக்குப் பழியாகவே போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட சிங்காரத்தை நெல்லை, கே.டி.சி. நகரில் வைத்து பண்ணையார் தரப்பு கொலை செய்ததாக போலீஸார் கருதுகின்றனர். இந்த வழக்கில் போலீஸார் இதுவரை 9 பேரை கைது செய்துள்ளனர்.

    தேடப்படும் குற்றவாளி

    தேடப்படும் குற்றவாளி

    சிங்காரம் கொலை வழக்கில் சுபாஷ் பண்ணையாருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று எங்களுக்கு சந்தேகம் உள்ளது. தலைமறைவாக இருக்கும் சுபாஷ் பண்ணையாரைத் தேடி வருகின்றனர். சுபாஷ் பண்ணையாரை தேடப்படும் குற்றவாளியாக நெல்லை மாவட்ட நீதிமன்றம் அறிவித்துள்ளது.

    ஆதரவாளர்களின் கருத்து

    ஆதரவாளர்களின் கருத்து

    சிங்காரம் கொலை வழக்கில் சுபாஷ் பண்ணையாருக்கு எந்த சம்மந்தமும் இல்லை. சிங்காரம் கொலையில் தேடப்பட்டவர்கள் போலீஸிடம் சிக்கியுள்ளனர் என்று அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். எது எப்படியோ தலைமறைவாக உள்ள சுபாஷ் பண்ணையாரை கேரளா, கர்நாடகா என தமிழக போலீசார் தேடி வருகின்றனர். சிக்குவாரா? தப்பிப்பாரா பார்க்கலாம்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+