வீடியோ கான்பரன்ஸ் மூலமே ஜெ. ஓட்டு கேட்கலாமே: இது சுப.வீ.யின் கிண்டல்!
லப்பைக்குடிகாடு: வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆட்சி நடத்தி வரும் முதல்வர் ஜெயலலிதா, வீடியோ கான்பரன்ஸ் மூலமே ஓட்டு கேட்கவும் செய்யலாம் என்று திராவிட இயக்க தமிழர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் விமர்சித்துள்ளார்.
சிதம்பரம் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட குன்னம் அருகே லப்பைக்குடிகாடு பேரூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனை ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சுப. வீரபாண்டியன் பேசியதாவது:
எங்கள் நந்தனுக்கு வழிவிட மறுத்த தில்லை தான் (சிதம்பரம்) இன்று எழுச்சி தமிழர் திருமாவை நாடாளுமன்றத்திற்கு அனுப்பியது. மீண்டும் அனுப்ப காத்திருக்கிறது.

கோபாலபுரத்திற்கு சென்ற எவரும் சுயமரியாதையை இழந்து வெளியேறியதில்லை ஆனால் போயஸ் கார்டனுக்கு சென்ற எவரும் சுயமரியாதையோடு வெளியேறியதில்லை என்பது வரலாறு.
காணொளி காட்சிமூலம் ஆட்சியை நடத்திக்கொண்டு இருக்கும் ஜெயலலிதா, காணொளி காட்சி மூலமே மக்களிடம் வாக்கு கேட்க வேண்டியது தானே

உறவுகளின் அடையாளமான மோதிரம் சின்னத்தில் வாக்களித்து, எத்தனை மோடிகள் வந்தாலும், நம் உறவுகளை சிதைத்துவிட முடியாது என்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டும்.
இவ்வாறு சுப. வீரபாண்டியன் பேசினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications