மகள் விவகாரம் குறித்து நேரில் கேட்டபோது ஜெ. கடுமையாக கோபமடைந்தார்: சு.சுவாமி 'புது குண்டு’
மகள் விவகாரம் குறித்து நேரில் கேட்டதாகவும் ஜெயலலிதா அதற்கு கோபமடைந்தார் எனவும் கூறுகிறார் சுப்பிரமணியன் சுவாமி.
Recommended Video

சென்னை: மகள் விவகாரம் குறித்து நேரில் கேட்டபோது ஜெயலலிதா மிகவும் கோபமடைந்தார் என பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.
ஜெயலலிதாவின் மகள் தாம் தான பெங்களூரு அம்ருதா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதே அம்ருதா, ஜெயலலிதாவை பெரியம்மா என கூறிவந்தார்.
திடீரென தாமே ஜெயலலிதாவின் மகள் என கூற பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உச்சநீதிமன்றமோ, கர்நாடகா உயர்நீதிமன்றத்தை நாடுவதற்கு அம்ருதாவுக்கு உத்தரவிட்டது.

தந்தை சோபன் பாபு
இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு 1980-ல் பெண் குழந்தை பிறந்தது என்றும் அந்த குழந்தையின் தந்தை நடிகர் சோபன் பாபுதான் என்றும் அவரது அத்தை மகள் லலிதா திட்டவட்டமாக கூறி வருகிறார். லலலிதாவின் இந்த தகவல் தமிழகத்தில் பெரும் புயலை கிளப்பி வருகிறது.

1991-ல் விருந்து
இதனிடையே நியூஸ் 18 தமிழ்நாடு சேனலுக்கு பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி இது குறித்து கூறியதாவது: 1991-ம் ஆண்டு மத்திய அமைச்சராக இருந்தேன். அப்போது திமுக ஆட்சி கலைக்கப்பட்ட நேரம். ஜெயலலிதா வீட்டில் இரவு நேர விருந்து கொடுக்கப்பட்டது.

கோபப்பட்ட ஜெ.
ஜெயலலிதாவும் நானும்தான் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது, மகள் இருப்பதாக ஒரு பிரசாரம் செய்யப்படுகிறதே என ஜெயலலிதாவிடம் கேட்டேன்.

நீதிமன்றத்தில் விவகாரம்
அதற்கு மிகவும் அதிகமாக கோபப்பட்டார் ஜெயலலிதா. இதெல்லாம் கருணாநிதியின் பொய் பிரசாரம் எனவும் கொந்தளித்தார். தற்போது ஒரு பெண் நீதிமன்றத்துக்கு மகள் என போயிருக்கிறார்.

காத்திருக்கிறோம்
அவர் ஜெயலலிதாவின் மகள்தானா என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications