2ஜி வழக்கு இன்னும் ஒரு வாரத்தில் மேல்முறையீடு.. சுப்பிரமணிய சுவாமி
2ஜி அலைக்கற்றை முறைகேட்டு வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.
Recommended Video

நெல்லை: 2ஜி அலைக்கற்றை முறைகேட்டு வழக்கில் டெல்லி சிபிஐ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து இன்னும் ஒரு வாரத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என்று பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி முறைகேடு செய்யப்பட்டதாக ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
சுமார் 6 ஆண்டுகள் நடந்த இந்த வழக்கு விசாரணையில் கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி, 2ஜி வழக்கில் இருந்து அனைவரும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

கொண்டாட்டம்
இதை பாஜக திமுக கூட்டணி மீது போடப்பட்ட ஜோடிக்கப்பட்ட வழக்கு என்றும் அந்த வழக்கு பொய்யானது என்பதையே ஷைனியின் தீர்ப்பு காட்டுவதாகவும் திமுகவினர் தெரிவித்தனர். மேலும் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் டெல்லியையே அமர்க்களப்படுத்தினர்.

மோசமான தீர்ப்பு
இந்த தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தது ஷைனியின் தீர்ப்பு. இதுகுறித்து 2ஜி வழக்கில் முதல்முதலாக வழக்கு தொடுத்த பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி கூறுகையில் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் மோசமான ஒரு தீர்ப்பு. உச்சநீதிமன்றத்தில் நான் முறையீடு செய்ய உள்ளேன்.

பின்னடைவும் இல்லை
இந்த வழக்கு விசாரணையை சில அதிகாரிகள் நேர்மையாக நடத்தவிலை. டெல்லி சிபிஐ நீதிமன்றத் தீர்ப்பால் இந்த வழக்குக்கு எந்த ஒரு பின்னடைவும் இல்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

வெற்றி நிச்சயம்
இந்த நிலையில் இன்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார் சுப்பிரமணியன் சுவாமி. அப்போது அவர் கூறுகையில், 2 ஜி வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் மேல்முறையீடு செய்யப்படும். 2ஜி வழக்கில் மேல்முறையீடு செய்யும்போது நாங்கள் வெற்றி பெறுவோம் என சுப்பிரமணியன் சுவாமி பேட்டி அளித்தார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications