அதிமுக கூட்டணியில் இருந்து முஸ்லிம் கட்சிகளை வெளியேற்றினால் ஜெ.க்கு பாஜக ஆதரவு.. சொல்வது சு.சுவாமி
சென்னை: அதிமுக கூட்டணியில் இருந்து முஸ்லிம் கட்சிகளை வெளியேற்றினால் அக்கட்சிக்கு பாரதிய ஜனதா ஆதரவு தரும் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டசபை தேர்தலில் திமுக- தேமுதிக- பாஜக இணைந்து கூட்டணி அமைக்க வேண்டும் என்ற கருத்தை கொளுத்திப் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் சுப்பிரமணியன் சுவாமி. ஆனால் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக இணைந்துவிட்டது. வழக்கம் போல தேமுதிக இறுதி முடிவை அறிவிக்காமல் இருந்து வருகிறது.
அதிமுகவைப் பொறுத்தவரையில் திமுக- தேமுதிக- காங்கிரஸ் என ஒரு மெகா கூட்டணி அமைந்தால் அதற்கு போட்டியாக வலுவான கூட்டணியை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் அக்கட்சி இருக்கிறது. பாஜகவுடன் கூட்டணி குறித்து அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது.

முஸ்லிம் கட்சிகளை வெளியேற்றினால்...
இந்நிலையில் சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சுப்பிரமணியன் சுவாமி பேசியதாவது:
சட்டசபை தேர்தலில் முஸ்லிம் கட்சிகளை கூட்டணியில் இருந்து ஜெயலலிதா வெளியேற்றினால் அவரை நாங்கள் ஆதரிப்போம்.

தயக்கம்...
திமுக, அதிமுக கட்சிகளுடன் முஸ்லிம் கட்சிகள் கூட்டணி அமைத்திருக்கின்றன. இதனால் அக்கட்சிகளுடன் மற்ற கட்சிகள் இணைய தயக்கம் காட்டுகின்றன.

ஸ்டாலின் 'ஓகே'
திமுக தலைவர் கருணாநிதிதான் இந்துக்களுக்கு எதிரி. ஆனால் மு.க.ஸ்டாலின் இந்துக்களுக்கு எதிரி அல்ல. அவர் தம்மை ஒரு இந்து என தெரிவித்தவர். இதனால் எதிர்காலத்தில் ஸ்டாலினுடன் இணைந்து செயல்பட முடியும்.

ராமர் கோவில்
அயோத்தியில் ராமர் கோவிலை இந்த ஆண்டுக்குள் கட்டி முடிப்போம். தமிழகத்தில் 2019-ம் ஆண்டுக்குள் பாரதிய ஜனதா வலிமை பெறும்.
இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications