தாம்பரம், கும்மிடிப்பூண்டி, அரக்கோணம், திருவள்ளூர் புறநகர் ரயில் சேவை 2-வது நாளாக அடியோடு ரத்து!!
சென்னை: வரலாறு காணாத மழை வெள்ளத்தால் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம்- செங்கல்பட்டு; அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் வழித்தடங்களில் இயக்கப்படும் அனைத்து புறநகர் மின்சார ரயில்களும் 2-வது நாளாக இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
மழைவெள்ளத்தால் ரயில் தண்டவாளங்கள் மூழ்கிக் கிடக்கின்றன. ரயில் பாதைகளில் பல அடி உயரத்துக்கு வெள்ள நீர் தேங்கிக் கிடக்கின்றன. பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன.

இதனால் சென்னை கடற்கரை- தாம்பரம்- செங்கல்பட்டு; சென்னை- அரக்கோணம் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்பட்ட அனைத்து மின்சார ரயில்களும் நேற்று அடியோடு ரத்து செய்யப்பட்டன.
2வது நாளாக ரத்து
இன்றும் மழைவெள்ளம் வடியாமல் மீண்டும் மழை கொட்டி வருகிறது. இதனைத் தொடர்ந்து சென்னை கடற்கரை- தாம்பரம்- செங்கல்பட்டு வழித்தடத்தில் மட்டும் இன்று 2வது நாளாக மின்சார ரயில் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதேபோல் சென்னை சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி- சூலூர்பேட்; சென்னை கடற்கரை- கும்மிடிப்பூண்டி- சூலூர்பேட்; சென்னை சென்ட்ரல்- திருவள்ளூர்- ஆவடி- அரக்கோணம்- திருத்தணி ஆகியவழித்தடங்களிலும் புறநகர் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் சென்னை கடற்கரை- ஆவடி- திருவள்ளூர்- அரக்கோணம்- திருத்தணி; கும்மிடிப்பூண்டி- எண்ணூர் ஆகிய வழித்தடங்களில் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வழக்கம் போல சென்னை கடற்கரை- வேளச்சேரி இடையேயான பறக்கும் ரயில்சேவை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications