Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுசித்ராவிற்கு மனச்சிதைவா? - கணவர் கார்த்திக் என்ன சொல்கிறார்?

சுசித்ரா மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். அவரது மனநிலை மாறியதால்தான் இதுபோல் நடந்து விட்டது என்று அவரது கணவர் கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சுசித்ரா மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். அவரது மனநிலை மாறியதால்தான் இதுபோல் நடந்து விட்டது. நாங்கள் அவரை கண்காணித்து வருகிறோம் என்று அவரது கணவர் கார்த்திக்குமார் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகும் செய்திகளால் இணைய உலகம் தற்போது பரபரப்பாகியுள்ளது. கோலிவுட் பட உலகில் புயல் வீசிக்கொண்டிருக்கிறது. எந்த நேரத்தில் யாருடைய அந்தரங்க படம் வெளியாகுமோ என்று அஞ்சிக்கொண்டிருக்கின்றனர்.

கடந்த வாரம் தனுஷ் பற்றி சில கருத்துக்கள் வெளியானது. இதுபற்றி சுசித்ராவின் கணவர் கார்த்திக் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட தகவலில், சுசித்ராவின் டுவிட்டர் யாரோ சிலரால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அதில் வெளியான படத்துக்கும், செய்திக்கும் எனது மனைவிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சம்பந்தப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்' என்று கூறி இருந்தார்.

டுவிட்டரில் கருத்து

டுவிட்டரில் கருத்து

தொடர்ந்து டுவிட்டரில் வெளியான செய்தியில் சுசித்ரா அவரது கணவர் கார்த்திக்கை டைவர்ஸ் செய்துவிட்டதாக கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் நடிகர் தனுஷ், நடிகைகள் திரிஷா, ஹன்சிகா, ஆன்ட்ரியா, டி.வி. தொகுப்பாளர் டி.டி. ஆகியோரின் அந்தரங்க படங்கள் வெளியானது. இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. அதே நேரத்தில் அந்த தகவலுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று சுசித்ரா கூறி இருந்தார்.

சுசித்ரா விளக்கம்

சுசித்ரா விளக்கம்

இதுபற்றி விளக்கம் அளித்த சுசித்ரா, மர்ம நபர்களால் எனது டுவிட்டர் வலைத்தளம் முடக்கப்பட்டு இருக்கிறது. யாருடைய புகைப்படமும் என்னிடம் இல்லை. நான் யாரையும் இழிவுபடுத்தும் ஆள் இல்லை. முன்பும் ஒருமுறை என் டுவிட்டர் முடக்கப்பட்டது. என்னை தொடர் பவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறி இருந்தார். ஆனால் அவரது பக்கத்தில் ஆபாச டுவிட்டுகள் தொடர்ந்தன.

சுசித்ரா கணவர் மன்னிப்பு

இந்த நிலையில் பாடகி சுசித்ராவின் கணவர் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு விளக்கம் அளித்துள்ளார். அதில், "சுசித்ரா மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். அவரது மனநிலை மாறியதால்தான் இதுபோல் நடந்து விட்டது. நாங்கள் அவரை கண்காணித்து வருகிறோம். பாதிக்கப்பட்ட அனைவரையும் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தேன். எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். கார்த்திக்கின் இந்த விளக்கத்தால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செல்வராகவன்

செல்வராகவன் - ஆண்ட்ரியா இருவருக்கும் இடையேயான இ-மெயில் உரையாடல்கள் வெளியாகின. இது பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. இது குறித்து இயக்குநர் செல்வராகவன் எனக்கு எதைப் பற்றியும் கவலையில்லை. அவர் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார் என்று அவரது கணவர் விடுத்த வேண்டுகோளை மதிக்கிறேன். தொடர்ந்து திரைப்படம் எடுக்கவே விரும்புகிறேன் என தனது ட்விட்டர் கணக்கில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ளார்.

செல்வராகவன் மனைவி

சுசித்ரா மற்றும் அவர் கணவர் கார்த்திக்குக்கு எங்கள் அனுதாபங்கள். இது கடினமான காலம். அவருக்காக நான் இரக்கப்படுகிறேன். இந்தச் சமயத்தில் மிகவும் வலிமைமிக்கவர்களாக இருங்கள். அதில் குறிப்பிடப்பட்டுள்ள செல்வராகவன், தனுஷ் மற்றும் இதர நண்பர்கள் அனைவரும், கார்த்திக்கின் பின்னால் பக்கபலமாக உள்ளோம் என்று கூறியுள்ளார். சுசித்ராவினால் கோலிவுட் பட உலகில் புயல் வீசிக்கொண்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+