சென்னையில் சட்டென மாறிய வானிலை.. பல இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை.. ஜில் மோடில் மக்கள்!
சென்னையின் பல இடங்களில் திடீரென மழை பெய்து வருகிறது.
Recommended Video

சென்னை: மெரினா, பூவிருந்தவல்லி உள்ளிட்ட பல இடங்களில் திடீரென மழை பெய்து வருகிறது
தமிழகத்தின் பல பகுதிகளில் அவ்வபோது நல்ல மழை பெய்து வந்தாலும் சென்னைக்கு பாரமுகமாகவே இருந்து வருகிறது.
கத்திரி வெயில் முடிந்த பிறகும் சென்னையில் வெயிலின் தாக்கம் குறையவில்லை. சொல்லப்போனால் கத்திரி வெயிலுக்கு பின்னர்தான் சென்னையில் வெயில் வெளுத்து வாங்கியது.

வெயிலால் அவதி
இந்நிலையில் சென்னையில் இன்று காலை முதலே வெயில் வாட்டி வதைத்தது. இதனால் மக்கள் பெரும் அவதியடைந்தனர்.

பல இடங்களில் மழை
இந்நிலையில் பிற்பகலுக்குப் பின் சென்னையின் பல பகுதிகளில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து வானிலை மாறியது. வளசரவாக்கம், போரூர், உள்ளிட்ட இடங்களில் மழை மேகங்கள் திரண்டு மழை பெய்து வருகிறது.

பலத்த காற்றுடன் மழை
இதேபோல் சென்னை மெரினா, வடபழனி, பூவிருந்தவல்லி, மாங்காடு, நசரத்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் திடீர் மழை பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் பல இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.

காற்றுடன் கனமழை
திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட இடங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. மயிலாப்பூர், எம்ஆர்சி நகர், பட்டினப்பாக்கம், விருகம்பாக்கம், முகப்பேர், உட்பட பல இடங்களில் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்துவருகிறது.

கோடையில் முதல் மழை
பல்லாவரம், பம்மல், குரோம்பேட்டை, அம்பத்தூர் உள்ளிட்ட இடங்களிலும் நல்ல மழை வெளுத்து வருகிறது. கோடையில் முதல் முறையாக சென்னையில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications