ஜல்லிக்கட்டுக்காக செங்கல்பட்டில் 3வது நாளாக உண்ணாவிரதம்... 4 பேருக்கு திடீர் உடல்நலக்குறைவு
செங்கல்பட்டில் ஜல்லிக்கட்டுக்காக உண்ணாவிரதம் இருந்த 4 பேர் திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்க்பட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு: செங்கல்பட்டில் ஜல்லிக்கட்டுக்காக மூன்றாவது நாளாக உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது. இதில் 4 பேருக்கு இன்று திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக செங்கல்பட்டில் 200க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்றும் இந்தியாவில் பீட்டாவை தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். அவர்களின் உண்ணாவிரத போராட்டம் இன்று மூன்றாவது நாளை எட்டியுள்ளது,
இந்நிலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 4 பேருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் 4 பேரும் ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தொடர் உண்ணாவிரதத்தில் இருந்தவர்களுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் போராட்டக் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications