கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ2,850...ரூ.550 அதிகரிப்பு : ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கரும்பு கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்துள்ளார். இதன் மூலம் கரும்பு டன் ஒன்றுக்கு 550 ரூபாய் அதிகரித்து 2850 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை: தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கரும்பு கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்துள்ளார். இதன்மூலம் கரும்பு டன் ஒன்றுக்கு 550 ரூபாய் உயர்த்தி 2850 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இததொடர்பாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ''நடப்பு கரும்பு பருவத்தில் கரும்புக்கான மாநில பரிந்துரை விலையை நிர்ணயம் செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் எனது தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், அமைச்சர்கள் எம்.சி.சம்பத், துரைக்கண்ணு, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சண்முகம், தொழில் துறை முதன்மை செயலாளர் விக்ரம் கபூர், வேளாண்மைத் துறைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, சர்க்கரைத் துறை ஆணையர் மகேசன் காசிராஜன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நடப்பு 2016-17 கரும்பு பருவத்திற்கு நியாயமான மற்றும் ஆதாய விலையாக டன் ஒன்றுக்கு 2,300 ரூபாய் என மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது. கடந்த ஆண்டு நிர்ணயித்த அதே தொகையான 2,300 ரூபாய் என மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது.
அண்டை மாநிலமான கர்நாடகத்தில் பெரும்பாலான ஆலைகள் டன் ஒன்றுக்கு 2,600 ரூபாய் வழங்கி வருகின்றன. அதே போன்று மகாராஷ்டிராவில் பெரும்பாலான ஆலைகள் டன் ஒன்றுக்கு 2,475 ரூபாய் வழங்கி வருகின்றன.கரும்பு விவசாயிகளின் நலன் கருதி, கடந்த ஆண்டு நிர்ணயித்ததைப் போலவே, மாநில அரசு பரிந்துரை விலையாக, போக்குவரத்து செலவு 100 ரூபாய் உட்பட, 2,850 ரூபாய் என விலை நிர்ணயம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மத்திய அரசு நிர்ணயித்த ஆதாய விலையான 2,300 ரூபாய் என்பதற்குப் பதில் தமிழக கரும்பு விவசாயிகள் டன் ஒன்றுக்கு 2,850 ரூபாய், அதாவது கூடுதலாக 550 ரூபாய், பெற வழி வகை ஏற்படும்.கரும்பு உற்பத்தித் திறனை உயர்த்தவும், சொட்டு நீர்ப் பாசன வசதிகளை கரும்பு விவசாயத்திற்கு அதிக அளவில் பயன்படுத்துவதை ஊக்கப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்திட வேளாண்மைத் துறைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.
கரும்பு விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைத்திடவும், சர்க்கரை ஆலைகளின் லாபத்தில் உரிய பங்கு பெறும் வகையிலும் கரும்பு விலை நிர்ணயம் செய்வது தொடர்பாக அரசுக்கு உரிய பரிந்துரைகளை அளிக்க விவசாயிகள், சர்க்கரை ஆலை பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கொண்ட ஒரு குழுவை அமைத்திடவும் உத்தரவிட்டுள்ளேன். என்று அந்த அறிக்கையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications