சிறைக்குள்ளேயே “கரும்பு விவசாயம்” - திருச்சி கைதிகள் சாதனை; அறுவடை துவக்கம்!
திருச்சி: திருச்சி சிறை வளாகத்தில் கைதிகளால் சாகுபடி செய்யப்பட்ட கரும்புகளை வெட்டும் பணி தொடங்கியுள்ளது.
திருச்சி மத்திய சிறையில் பல்வேறு வழக்குகளில் கைதாகி அடைக்கப்பட்டு உள்ள விசாரணை கைதிகள், வழக்கு விசாரணை முடிவடைந்து அளிக்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் தண்டனை கைதிகள் உள்பட கிட்டதட்ட 1500 கைதிகள் உள்ளனர். இவர்களில் தண்டனை கைதிகள் சிறைவாழ்க்கை முடிந்து வீடு திரும்பும்போது ஏதாவது தொழில் செய்து திருந்தி வாழவேண்டும் என்பதற்காக அவர்களுக்கு சிறையில் பல்வேறு தொழிற்பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இது தவிர சிறை வளாகத்தில் உள்ள தரிசு நிலத்தை செம்மைப்படுத்தி அந்த இடங்களில் காய்கறிகள் பயிரிட்டு தோட்ட வேலைகளை பராமரிக்கும் பணிகளையும் கைதிகள் செய்து வருகிறார்கள். கைதிகளால் விளைவிக்கப்படும் காய்கறிகள் மற்றும் கீரை வகைகள் சிறை முன்பாக "சிறை அங்காடி" என்ற வணிக வளாகத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் நெல் பயிரிடப்பட்டு அதனையும் கைதிகள் பராமரித்தார்கள்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் சிறை வளாகத்தின் ஒரு பகுதியில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் பொங்கல் பண்டிகைக்கு விற்பனை செய்ய கரும்பு சாகுபடி செய்யப்பட்டது. சிறையில் உள்ள தண்டனை கைதிகள் இதற்கு முறையாக தண்ணீர் விட்டு பராமரித்து வந்தனர். தற்போது அந்த கரும்புகள் அறுவடைக்கு தயாரான நிலையை அடைந்து உள்ளதால் அவற்றை வெட்டும் பணி நேற்று தொடங்கியது. கைதிகள் நேற்று அந்த தோட்டத்தில் உள்ள கரும்புகளில் ஒரு பகுதியை வெட்டினார்கள். பொங்கல் பண்டிகையின்போது பயன்படுத்தும் மஞ்சள் கொத்துகளையும் மண்ணில் இருந்து பறித்து எடுத்தனர்.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் அனைத்து கரும்புகளும் வெட்டப்பட்டு சிறை அங்காடியில் குறைந்த விலைக்கு விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சிறை கண்காணிப்பாளர் முருகேசன் தெரிவித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications