முதல்வர் ஜெயலலிதாவுக்கு பா.ஜ.கவின் சுமித்ரா மகாஜன், காங்கிரஸின் பி.ஜே குரியன் வாழ்த்து!
சென்னை: தமிழகத்தின் முதல்வராக 5வது முறையாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜ்யசபா துணைத் தலைவர் பி.ஜே.குரியன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதாவை கர்நாடகா உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.

ஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், உங்களது தலைமையில் தமிழகம் முன்னேற்றமடையும் என நம்பிக்கை கொள்வதாக சுமித்ரா மகாஜன் கூறியுள்ளார்.
இதேபோல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜ்யசபா துணைத் தலைவர் பி.ஜே. குரியனும் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து கர்நாடாகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சி அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக அறிவித்துள்ள நிலையில் மூத்த காங்கிரஸ் தலைவரான குரியன், ஜெயலலிதாவுக்கு வாழ்த்து செய்தி அனுப்பியிருப்பது அக்கட்சியில் சலசலப்பை உருவாக்கி உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications