வெளுக்கும் வெயில்... அந்தந்த தொகுதிகளிலேயே வேட்பு மனு தாக்கல் செய்யலாம்!
நெல்லை: கடும் வெயில் கொளுத்தி வருவதால் அந்தந்த தொகுதிக்குட்பட்ட தாலுகா அலுவலகங்களிலேயே வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான வசதியை ஏற்படுத்தவுள்ளது தேர்தல் ஆணையம். இதனால் அலைச்சல் குறையும்.
தமிழக சட்டசபை தேர்தல் மே 16ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 22ம் தேதி தொடங்கி வரும் 29ம் தேதி வரை நடக்கிறது.

இந்த வேட்பு மனுக்களை பெறுவதற்காக தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தேர்தல் அலுவலர்கள், அவர்களுக்கு உதவியாக 3 அலுவலர்களும் தேர்தல் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். வேட்பு மனு தாக்கலுக்கான படிவங்கள் அச்சகங்களில் அச்சடிக்கப்பட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் தாக்கல் செய்வதுதான் இதுவரை இருந்து வரும் நடைமுறைாகும். ஆனால் தற்போது தமிழகத்தில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் கடும் வெயிலில் வருவதாலும், பல கூட்டணிகள் போட்டியிடுவதால் வேட்பு மனு தாக்கல் அலுவலகத்தில் கடும் கூட்ட நெரிசல் ஏற்படும் என்பதாலும் வேட்பு மனு தாக்கலின்போது பல சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் அந்தந்த தாலுகா அலுவலகத்திலேயே வேட்பு மனுக்களை பெற தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடந்தது. அப்போது இந்தப் புதிய முறையை பின்பற்றுமாறு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications