திசை மாறிய காற்று... அரூரில் ஆலங்கட்டி மழை... சென்னையிலும் மழைக்கு வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தருமபுரி மாவட்டம் அரூரில் கடந்த அரை மணி நேரமாக ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது. 15 ஆண்டுகளுக்கு பிறகு ஆலங்கட்டி மழை பெய்வதால் அரூர் சுற்றுவட்டார பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

காற்றின் திசை மாறியுள்ளதால், தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணிநேரங்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Summer grips Chennai; Met officials expect rain

தருமபுரி மாவட்டம் அரூரில் கடந்த அரை மணி நேரமாக ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது. 15 ஆண்டுகளுக்கு பிறகு ஆலங்கட்டி மழை பெய்வது குறிப்பிடத்தக்கது. அற்த சுற்றுவட்டாரம் முழுவதும் மழை பெய்வதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதனிடையே காற்றின் திசை, வட கிழக்கு பகுதியில் இருந்து தென்மேற்கு திசைக்கு திரும்பியுள்ளதால், அடுத்த இரண்டு நாட்களுக்கும் சென்னையில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களில், அரூர், ஏற்காடு ஆகிய இரண்டு இடங்களில் மட்டும் அதிகபட்சமாக 2 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளதாகவும் ரமணன் குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+