இன்னும் 4 நாட்களுக்கு கொளுத்தப் போகிறதாம் கோடை வெயில் - வானிலை ஆராய்ச்சி மையம் தகவல்!
சென்னை: தமிழகத்தில் வெயிலின் தாக்கம் ஏற்கனவே மக்களை வாட்டி வதைக்கும் நிலையில் 4 நாட்களுக்கு இன்னும் வெயிலின் கடுமை அதிகரிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு உள்ளிட்ட தென் இந்தியாவில் இந்த வருட கோடையில் வெப்பம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்று மத்திய வானிலை மையம் நீண்ட கால வானிலை அறிக்கையாக தெரிவித்தது. அதன்படி தமிழ்நாட்டில் இந்த வருடம் கோடை வெயிலின் தன்மை அதிகரித்து வருகிறது.

சென்னையில் உள்ள வானிலை மண்டல ஆராய்ச்சி இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் இதுகுறித்து, "அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்பம் மேலும் சற்று அதிகமாக இருக்கும்.
கன்னியாகுமரி மற்றும் கேரளாவையொட்டிய தமிழக பகுதிகளிலும் லேசாக இன்று மழை பெய்யும். நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணிவரை முடிந்த 24 மணிநேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியில் 1 செ.மீ. மழை பெய்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
கொளுத்தும் கோடை வெயிலுக்கு காரணமே நிறைய மரங்கள் அழிக்கப்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டதினால் ஏற்பட்டுள்ள வெயிலின் தாக்கம்தான் என்று சுற்றுச்சூழல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications